வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. சட்டசபை தேர்தல் 2016
Written By கே.என்.வடிவேல்
Last Updated : திங்கள், 9 மே 2016 (06:18 IST)

நடிகர் விஜய் மக்கள் இயக்கம் திமுகவுக்கு ஆதரவு

நடிகர் விஜய் மக்கள் இயக்கம் திமுகவுக்கு ஆதரவு

நடைபெற உள்ள சட்ட மன்ற தேர்தலில், நடிகர் விஜய் மக்கள் இயக்கம் திமுகவுக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளது.
 

 
நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டம் திருச்செந்தூரில் அதன் மாவட்ட தலைவர் பில்லா ஜெகன் தலைமையில் நடைபெற்றது.
 
இந்தக் கூட்டத்தில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளிலும் போட்டியிடும் திமுக மற்றும் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவிப்பது, மேலும், திமுக மற்றும் திமுக கூட்டணி வேட்பாளர்களை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற விஜய் ரசிகர்கள் அனைவரும் தீவிரமாக பணியாற்ற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 
இதனால், நடிகர் விஜய் ரசிகர்கள் திமுகவுக்கு ஆதரவாக களம் இறங்கி இருப்பது திமுகவுக்கு பெரிதும் சாதமாக உள்ளது.


வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்