காங்கிரஸ் வேட்பாளர் மீது ஆசிட் வீச்சு

காங்கிரஸ் வேட்பாளர் மீது ஆசிட் வீச்சு


K.N.Vadivel| Last Modified வியாழன், 12 மே 2016 (07:55 IST)
சென்னை, அம்பத்தூர் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் அசன் மவுலானா மீது மர்ம நபர்கள் ஆசிட் வீசிய சம்பவம் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 
சென்னை, அம்பத்தூரில் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் எம்பி ஆரூண் மகன் அசன் மவுலானா போட்டியிடுகிறார். வேட்பாளர் அசன் மவுலானா, சென்னை வாவின் பகுதியில் தேர்தல் பிரசாரத்தை முடிந்து, தனது காரில் அடுத்த பகுதிக்கு புறப்பட்டு சென்றார். அப்போது, அவரது கார், மேம்பாலம் அருகே சென்ற போது, மர்ம நபர்கள் சிலர் ஆசிட் கலந்த முட்டையை  வீசினர். இதில், வேட்பாளர் அசன் மவுலானா மற்றும் காரில் இருந்தவர்கள் மயக்கமடைந்தனர்.
 
தகவல் அறிந்த போலீசார், விரைந்து சென்று அவர்களை மீட்டு  மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 
இந்த நிலையில், ஆசிட் வீசிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்  திமுக மற்றும் காங்கிரஸ் கட்சியினர் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்த பின்பு அவர்கள் கலைந்து சென்றனர்.
 
இந்த சம்பவம், தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 
 
 
 


இதில் மேலும் படிக்கவும் :