1. செய்திகள்
  2. செய்திகள்
  3. சட்டசபை தேர்தல் 2016
Written By Suresh
Last Updated : சனி, 30 ஏப்ரல் 2016 (16:07 IST)

3 தொகுதிகளில் பாமக வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் நிராகரிப்பு

3 தொகுதிகளில் பாமக வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் நிராகரிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட ராமநாதபுரம், திருச்செந்தூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய தொகுதிகளில் தாக்கல் செய்திருந்த வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.


 

 
தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுத்தாக்கல் நேற்றுடன் (ஏப்ரல் 29) முடிவடைந்தது.
 
இதைத் தொடர்ந்து,  இன்று (ஏப்ரல் 30) வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றன.
 
இந்நிலையில், பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ராமநாதபுரம், திருச்செந்தூர் மற்றும் தூத்துக்குடி தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்திருந்த அதிகாரபூர்வ வேட்பாளர்களின் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
 
அதன்படி, ராமநாதபுரத்தில் அப்துல் லத்தீப், திருச்செந்தூரில் உத்தர்சிங், தூத்துக்குடியில் சேசையா பர்னாந்து ஆகியோரின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
 
முன்னதாக, முதலமைச்சர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி, தேமுதிக தலைவர் விஜயகாந்த் பாமகவின் முதலமைச்சர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட பலரது வேட்புமனு ஏற்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.