ஓவியா ரசிகர்களை சமாளிக்க அஜீத் பக்கம் சென்ற விஜய் டிவி..


Murugan| Last Modified சனி, 5 ஆகஸ்ட் 2017 (14:08 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து ஓவியா ஏறக்குறைய வெளியேறிய சூழ்நிலையில், அவரின் ரசிகர்களை சமாளிக்க நடிகர் அஜீத்திற்கு ஐஸ் வைக்கும் வேலையில் இறங்கியுள்ளது விஜய் தொலைக்காட்சி...

 

 
தொடர்ந்து ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக, ஓவியா தற்கொலைக்கு முயன்றதாகவும், எனவே அவரை நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றி  மருத்துவமனையில் மனநல சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் செய்திகள் வெளியானது. இது, ஓவியா ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவர் இல்லையெனில் நிகழ்ச்சியையே பார்க்க மாட்டோம் என அவர்கள் பொங்கி வருகின்றனர்.
 
அநிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியது உண்மைதான். அந்த நிகழ்ச்சியில் மீண்டும் பங்குபெற என்னிடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது என ஓவியா தரப்பில் இருந்து கூறப்பட்டது.
 
இந்நிலையில், காலை, மாலை என ஒரு நாளைக்கு பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றி இரண்டு புரோமோ வீடியோவை வெளியிடும், விஜய் தொலைக்காட்சியின் முகநூல் மற்றும் டிவிட்டர் பக்கங்களில், இன்று காலை முதல் எந்த புரோமோ வீடியோவும் வெளியிடப்படவில்லை.


 

 
அதற்கு பதிலாக, நடிகர் அஜீத்தின் 25 கால சேவைக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது,  ஓவியாவின் தீவிர ரசிகர்களின் எதிர்ப்பை சமாளிக்க, அஜீத் ரசிகர்களை தன் பக்கம் இழுக்கும் வேலையில் விஜய் தொலைக்காட்சி இறங்கியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவிக்கப்படுகிறது.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :