வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சின்னத்திரை
  3. தொலைக்காட்சி
Written By Murugan
Last Modified: வியாழன், 10 ஆகஸ்ட் 2017 (11:57 IST)

காயத்ரிக்கும் ரைசாவிற்கும் மோதல் - பரபர பிக்பாஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து ஓவியா வெளியேறிய பின் பல திருப்பங்கள் ஏற்பட்டு வருகிறது.


 

 
அதாவது, தன்னை சுயபரிசோதனை செய்து கொண்ட ரைசா, பரணி மற்றும் ஓவியா ஆகியோர் வெளியே சென்றதற்கு அனைவரும் ஒருவகையில் காரணம் என்பதை உணரத் தொடங்கியுள்ளார். சமீபத்தில் கூட உன் அக்கா, தோழி என்பதையெல்லாம் வெளியே வைத்துக்கொள்ளுங்கள். இது விளையாட்டு இதில் அதையெல்லாம் பார்க்காதீர்கள் என ஆரவ்விடம் நேரிடையாகவே கூறினார்.
 
இந்நிலையில் இன்று ஒரு புரோமோ வீடியோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. அதில், சினேகன் மற்றும் வையாபுரி ஆகியோரில் யாரை பாதுகாக்க விரும்புகிறீர்கள் என பிக்பாஸ் கேட்க, அனைவரும் அதுபற்றி ஆலோசனை செய்கின்றனர்.
 
அப்போது, வையாபுரி இங்கே இருந்தால் நல்லது என சச்தி கூற, ரைசாவோ சினேகனுக்கு ஆதரவு கொடுக்கிறார். காயத்ரி ஏதோ கூற, நாளைக்கு உங்களுக்கு ஒரு பிரச்சனை வந்தால்? என ரைசா காயத்ரியிடம் கேட்க, அதை நானே தனியாக சமாளித்துக்கொள்வேன் என காயத்ரி கூறுகிறார். அதைக் கேட்ட ரைசா காயத்ரியை பார்த்து ஒரு நமட்டு சிரிப்பு சிரிக்கிறார். இதனால், கோபமடைந்த காய்த்ரி, எதற்காக சிரித்தாய்? அதன் அர்த்தம் என்ன? என கோபமடைய, மற்றவர்கள் அவரை சமாதானம் செய்து அங்கிருந்து அழைத்து செல்கின்றனர்.
 
அதாவது, காயத்ரி தனக்கு எப்போதும் துணையாக சக்தி, சினேகன் போன்ற ஒருவரை கூட வைத்துக்கொண்டுதான் செயல்படுவார் என்பதை புரிந்துதுதான் ரைசா சிரித்தார் எனத் தெரிகிறது.
 
இவ்வளவு நாட்கள் அமைதியாக இருந்த ரைசாவிற்கும், காயத்ரிக்கும் மோதல் ஏற்பட தொடங்கியிருப்பதால் பிக்பாஸ் சூடு பிடிக்கும் எனத் தெரிகிறது.