வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சின்னத்திரை
  3. தொலைக்காட்சி
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 13 அக்டோபர் 2022 (14:32 IST)

ஜிபி முத்துவை அழவைத்த தனலட்சுமி – கொந்தளித்த ஆர்மி!

முத்து இன்று வெளியாகியிருக்கும் இரண்டாவது ப்ரொமோ வீடியோவில் அழுவது அவரது ஆர்மியை கொந்தளிக்க வைத்துவிட்டது.


கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ந்து 5 சீசன்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீஸன் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று துவங்கியது. இதில் முதல் கட்டமாக இருபது பேர் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். இந்த இருபது பேரில் வீட்டில் நுழைந்த தருணத்திலிருந்தே பெரும் வரவேற்பைப் பெற்றவராக இருக்கிறார் டிக்டாக் பிரபலமான ஜிபி முத்து.

பிக்பாஸ் துவக்க நிகழ்ச்சியின்போது, நிகழ்ச்சித் தொகுப்பாளர் கமல்ஹாசன் ஆதாம் - ஏவாள் கதையைக் கூறியபோது, ஆதாம் என்றால் யார் என்று கேட்டு அதிரவைத்தார். இவர் முதல் நாளே பிக்பாஸ் வீட்டுக்குள் தனியாக இருக்க முடியாமல் அவர் புலம்பியது வைரல் ஆனது.

டெய்லி ப்ரோமோவில் இடம் பெற்றுவிடும் ஜி.பி. முத்து இன்று வெளியாகியிருக்கும் இரண்டாவது ப்ரொமோ வீடியோவில் அழுவது அவரது ஆர்மியை கொந்தளிக்க வைத்துவிட்டது. இன்று ஜி.பி. முத்துவுக்கும், தனலட்சுமிக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டிருக்கிறது.

பிரச்சனையின் போது தனலட்சுமி முத்துவை நடிக்கிறார் என கூறியதால் மனமுடைந்து முத்து அழுவது போல இந்த ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. முழு எபிசோடை பார்த்தால் தான் பிரச்சனை என்னவென புரியும்.