வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சின்னத்திரை
  3. தொலைக்காட்சி
Written By VM
Last Updated : திங்கள், 1 அக்டோபர் 2018 (11:24 IST)

பிக்பாஸ் சீசன் 3! கமல் கொடுத்த சர்ப்ரைஸ்

நடிகர் கமல் ஹாசன் பிக்பாஸ் 1 நிகழ்ச்சியைத் தொடர்ந்து பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் பங்கேற்க மாட்டார் என கூறப்பட்டது. ஆனால் அவர் பங்கேற்றார்.
இந்த நிலையில்தான் பிக்பாஸ் சீசன் 3 கமல் பண்ண வாய்ப்பே இல்லை, அரசியல் பணியில் தீவிரம் காட்டுவார். தேர்தலும் நெருங்கிவிடும் என்றெல்லாம்  பேசினார்கள்.
 
இந்நிலையில் நேற்றைய பிக்பாஸ் 2 சீசன் நிறைவு நிகழ்ச்சியில், ஆரம்பமே கமலிடம் கேள்வி கேட்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முதல் கேள்வியே ‘சார், பிக்பாஸ் 2 சீசன் முடிந்துவிட்டது. பிக்பாஸ் சீசன் 3ல் நீங்கள் பங்கெடுப்பீர்களா சார்?’என்று ஒரு நேயர் கேட்டார்.
 
உடனே கமல், ‘பங்கெடுக்கலாமா, வேணாமா’ என்று அந்த நேயரிடம் கேட்டார். ‘நீங்கதான் சார் பிக்பாஸ் 3 பண்ணனும்’ என்று அந்த நேயர் சொல்ல,  எல்லோரும் கைத்தட்டினார்கள். அப்போது கமல், ‘அவ்ளோதானே. பண்ணிட்டாப் போச்சு’ என்றார். அவ்வளவுதான்… இன்னும் பலத்த கரவொலி எழுந்து,  அடங்க நேரமாகியது.