செவ்வாய், 18 ஜூன் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தமிழக சட்டமன்ற தேர்தல் 2021
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 6 ஏப்ரல் 2021 (08:41 IST)

இயந்திரத்தில் கோளாறு... வாக்குபதிவு நடக்காத தொகுதிகள் எவை தெரியுமா?

சில தொகுதிகளில் வாக்குபதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் மக்களுக்கு வாக்களிப்பதில் சிரமம் ஏற்பட்டது.  
 
தமிழகத்தில் காலை 7 மணிமுதல் வாக்குப்பதிவு தொடங்கி அமைதியான முறையில் நடந்து வருகிறது. அரசியல் தலைவர்கள் எல்லோரும் தங்கள் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் சில தொகுதிகளில் வாக்குபதிவு இயந்திரத்தில் கோளாறு ஏற்பட்டதால் மக்களுக்கு வாக்களிப்பதில் சிரமம் ஏற்பட்டது.  
 
ஆதம்பாக்கம் ஜி.கே.ஷெட்டி பள்ளியில் வாக்கு இயந்திரம் பழுதால் ஒரு மணி நேரம் வாக்குப்பதிவு தாமதம்.
 
மதுரை திருமங்கலம் அருகே புதுப்பட்டி வாக்குச்சாவடியில் இயந்திரக்கோளாறால் வாக்குப்பதிவு தொடங்கவில்லை. 
 
தியாகராய நகர் தாமஸ் சாலையில் உள்ள மையத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறால்  வாக்குப் பதிவு நிறுத்தம்.
 
மதுரை மேற்கு தொகுதி மருது பாண்டியர் நகரில் உள்ள தொகுதியில் வாக்கு இயந்திரம் வேலை செய்யாததால் வாக்குப்பதிவு துவங்கவில்லை.