செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தமிழ் மாதப் பலன்
Written By
Last Modified: சனி, 19 அக்டோபர் 2019 (14:47 IST)

கன்னி: ஐப்பசி மாத ராசி பலன்கள்

கிரகநிலை: ராசியில்   செவ்வாய்   - தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், புதன்(வ),  சுக்ரன்  - தைரிய ஸ்தானத்தில்  குரு -  சுக  ஸ்தானத்தில் சனி, கேது -  பாக்கிய   ஸ்தானத்தில் சந்திரன் - தொழில்  ஸ்தானத்தில்  ராஹூ  என கிரகங்கள் வலம் வருகின்றன.
கிரகமாற்றங்கள்:
 
29-Oct-19 அன்று காலை 3.49 மணிக்கு குரு பகவான் சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
29-Oct-19 அன்று  இரவு 7.22 மணிக்கு சுக்கிர பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். 
11-Dec-19 அன்று  மாலை 6.21 மணிக்கு செவ்வாய் பகவான் தன ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
 
பலன்:
 
கணிவான பேச்சால் அனைவரையும் கவரும் கன்னி ராசி அன்பர்களே, இந்த மாதம் சில நேரங்களில் யோசிக்காமல் பேசி வம்பில் மாட்டிக்  கொள்ள நேரலாம். உங்கள் ரகசியங்களை எவரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம்.
  
குடும்ப நிலைகளில் இருந்து வந்த தேக்க நிலை மாறி உற்சாகம் பிறக்கும். எதிர்பார்த்தபடி பணம் மட்டும் கைக்கு வந்து செல்லும். ஆனால்  சேமிப்பதற்கு முயற்சி செய்தால் மட்டுமே பலன் கிடைக்கும். எதிர்ப்புகளையும், தடைகளையும் தாண்டி செல்வீர்கள். பேசப்பட்டுக் கொண்டிருந்த  சுபகாரியங்களில் சிக்கல்கள் விலகும்.
 
தொழிலில் வியாபாரிகளுக்கு லாபம் ஈட்டும் காலமிது. பணியாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பங்குதாரர்கள் மூலம் சில தொந்தரவுகள் நேரிடலாம். அழகுநிலையம் வைத்திருப்போர், காஸ்மெட்டிக்ஸ் வியாபாரம் செய்வோர் மற்றும் ஆடை அணிகலன்கள் விற்பனை  செய்வோருக்கு ஏற்ற காலமிது. தங்கள் தொழிலை விரிவுபடுத்திக் கொள்ள சரியான சமயமிது.
 
உத்தியோகஸ்தர்கள் உத்தியோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு தேடி வரும். வருமானம் சீராக இருக்கும். விரும்பிய இடமாற்றங்களும்  கிடைக்கும். மேலதிகாரிகளின் அன்பும், ஆதரவும் கிடைக்கும். சக ஊழியர்களுடன் நல்ல நட்பு தொடர்வதால் உங்களின் வேலைகள் குறித்த  காலத்திற்குள் நிறைவேறிவிடும். உங்களின் வேலைத் திறனைக் கூட்டிக்கொள்ள புதிய அலுவலகப் பயிற்சிகளை மேற்கொள்வதற்கான  வாய்ப்புகள் கிடைக்கும்.
 
பெண்கள் ஆடை ஆபரண சேர்க்கை அதிகரிக்கும். பிதுரார்ஜித சொத்து விஷயங்களில் ஒரு நல்ல முடிவுகள் வந்து சேரும். குடும்பச் செலவினங்கள் தாராளமாகும். பிள்ளைகள் வழியில் கடன்பெற வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படலாம். 
 
கலைத் துறையினருக்கு ஓய்வில்லாமல் உழைக்க நேரும். அதற்கேற்றவாறு கூடுதல் வருமானமும் வரும். புதிய ஒப்பந்தங்கள் வரும். லாபம்  பெருகும். பழைய பாக்கிகள் வசூலாகும். உடல்நிலையில் இருந்துவந்த சிரமங்கள் முற்றிலும் நீங்கும். 
 
அரசியல்துறையினர் உங்கள் மேல் போட்டி மற்றும் பொறாமை கொண்டவர்கள் ஒதுங்கி விடுவார்கள்.  அரசு விவகாரங்களில் உள்ள  வேலைகளை திறம்படச் செய்வீர்கள். பாராட்டும், பதவியும் உண்டு. மாணவமணிகள் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறுவதற்குரிய வாய்ப்பு  தெரியும்.  மிகச் சிலரே உங்களை புரிந்து கொள்வார்கள். நண்பர்களுடன் பழகும் போது கவனமாக இருக்கவும்.
 
உத்திரம் 2, 3, 4 பாதம்:
 
இந்த மாதம் மற்றவர்களிடம் அனுசரித்து செல்வதன் மூலம் வீண் பிரச்சனை வராமல் தடுக்கலாம். சிறிய விஷயத்துக்கு கூட கோபம் வரலாம். கட்டுப்படுத்துவது நன்மை தரும். திடீர் பண தேவை உண்டாகலாம். தொழில், வியாபாரம், லாபகரமாக நடக்கும். அரசாங்கம் மூலம் நடக்க  வேண்டிய காரியங்கள் சாதகமாக பலன் தரும். எதிர்ப்புகள் அகலும். எல்லா நலன்களும் உண்டாகும். விரும்பியது கிடைக்க கூடுதல் முயற்சி  தேவை.
 
அஸ்தம்:
 
இந்த மாதம் தொழில் வியாபாரம் தொடர்பான வீண் அலைச்சல் ஏற்படும். வாடிக்கையாளர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது. எதிர்பார்த்த பணம் கைக்கு வருவதில் தாமதம் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிர்வாகம் பற்றி யாருடனும் விமர்சனம் செய்யாமல் இருப்பது  நல்லது. கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். உங்களது செயல்களுக்கு குடும்பத்தினரின் ஒத்துழைப்பு இருக்கும். சுதந்திரமான  எண்ணம் ஏற்படும்.
 
சித்திரை 1, 2, பாதம்:
 
இந்த மாதம் பதவி உயர்வு, சம்பள உயர்வு தாமதப்படலாம். குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்பாடுகள் உங்களுக்கு டென்ஷன் தருவதாக இருக்கலாம். கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நல்ல பலன் தரும். பிள்ளைகளிடம் அனுசரித்து செல்வதும்  அவர்கள் போக்கில் விட்டு பிடிப்பதும் நல்லது. பயணம் மூலம் லாபம் கிடைக்க பெறுவீர்கள். புதிய நபர்கள் நட்பு உண்டாகும்.
 
பரிகாரம்:
 
ஸ்ரீலக்ஷ்மி நாராயணரை வழிபட்டு துளசி செடிக்கு பூஜை செய்து வாருங்கள்.
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்
சந்திராஷ்டம தினங்கள்: நவம்பர் 11, 12
அதிர்ஷ்ட தினங்கள்: நவம்பர் 4, 5