ஞாயிறு, 3 நவம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தமிழ் மாதப் பலன்
Written By
Last Modified: திங்கள், 15 மார்ச் 2021 (17:08 IST)

தனுசு: பங்குனி மாத ராசி பலன்கள் 2021

(மூலம், பூராடம்,  உத்திராடம் 1ம் பாதம்) - உல்லாசத்திற்கும் கேளிக்கைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்காத தனுசு ராசியினரே நீங்கள் தெய்வ நம்பிக்கை  அதிகமிக்கவர்கள். இந்த மாதம் மன உறுதி அதிகரிக்கும். சொத்துக்களை அடைவதில் இருந்த தடைகள் நீங்கும்.


உயர்நிலையில் உள்ளவர்களுடன் இருந்து வந்த  மனவருத்தம் நீங்கும். உடல் ஆரோக்கியம் மேலோங்கும். வாகனங்கள் மூலம் செலவு உண்டாகலாம். சுக்கிரன் சஞ்சாரத்தால் எதிர்பார்த்த பண வரவு இருக்கும்.  வீட்டிற்கு தேவையான வசதிகள் செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். வீடு மனை வாங்குவதற்கான தடைகள் அகலும்.
 
தொழில் வியாபாரம் சுமாராக இருக்கும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கலாம். புதிய வாடிக்கையாளர்கள் தொடர்பு உண்டாகும். பழைய சிக்கல்கள் தீர்வதில் தாமதம்  ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாமல் அனுசரித்து செல்வது நல்லது. திறமையான செயல்பாட்டால் பாராட்டு  கிடைக்கும்.
 
குடும்பத்தில் எதிர்பாராத விருந்தினர் வருகையால் விரும்பத்தகாத வாக்குவாதங்கள் ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்வது நல்லது. குழந்தைகள் பற்றிய கவலை உண்டாகும். அவர்களுக்காக பாடுபடுவீர்கள்.  
 
பெண்களுக்கு திட்டமிட்டு செய்தாலும் காரியங்களில் தடை ஏற்படும். எதிர்பாராத செலவு உண்டாகும். 
 
கலைத்துறையினருக்கு உடன் பணிபுரிபவர்களுடன்  வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம் கவனம் தேவை. எனவே அனுசரித்து செல்வது நல்லது. எதிலும் முழு கவனத்துடன் ஈடுபடுவது நன்மையை தரும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். வீண் அலைச்சல் ஏற்படலாம். ஆனாலும் சுக்கிரன் சஞ்சாரத்தால் மனதில் இருந்த  குழப்பம் நீங்கி நிம்மதி உண்டாகும். கடன் பிரச்சனை தீரும்.
 
அரசியல்துறையினருக்கு நீங்கள் அவசரப்படாமல்  நிதானமாக எதையும் செய்தால் வெற்றி நிச்சயம். எல்லா வகையிலும் நன்மை உண்டாகும். பணவரத்து  அதிகரிக்கும். நண்பர்களால் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். புதிய நபர்களின் நட்பும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். சூரியன் சஞ்சாரத்தால் ஏற்கனவே செய்த  ஒரு செயலை நினைத்து வருந்த நேரிடும். 
 
மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்கள் தாமதமாக நடக்கும். புதிய நட்புகள் கிடைக்கும். 
 
மூலம்:
இந்த மாதம் அடுத்தவர்கள் கடனுக்கு பொறுப்பேற்காமல் இருப்பது நல்லது. எந்த ஒரு காரியமும் மந்தமாக நடக்கும். எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டி இருக்கும். தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு லாபம் வராவிட்டாலும், சுமாராக வரும். 
 
பூராடம்:
இந்த மாதம் தொழில் தொடர்பான செலவு கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறிய வேலைக்கும் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது  நல்லது. 
 
உத்திராடம் - 1:
இந்த மாதம் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். காரிய தாமதம் ஏற்படும். வீண்கவலை இருக்கும். பணவரவு அதிகப்படும் அதே நேரத்தில் வீண்செலவு உண்டாகும். சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும்  அதை செய்ய முடியாத  சூழ்நிலை வரும். 
 
சந்திராஷ்டம தினங்கள்: மார்ச் 24, 25
அதிர்ஷ்ட தினங்கள்: மார்ச் 16, 17, 18; ஏப்ரல் 13, 14
பரிகாரம்: சித்தர்களை வணங்கி வர போட்டிகள் குறையும். மனம் தெளிவடையும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: வியாழன், புதன், வெள்ளி.