வியாழன், 26 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தமிழ் மாதப் பலன்
Written By
Last Modified: வியாழன், 19 ஆகஸ்ட் 2021 (18:13 IST)

மீனம்: ஆவணி மாத ராசி பலன்கள் 2021

(பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) - கிரகநிலை: தைரிய வீரிய  ஸ்தானத்தில் ராஹூ -  ரண ருண ரோக  ஸ்தானத்தில் சூர்யன், புதன், செவ்வாய் -  களத்திர  ஸ்தானத்தில் சுக்ரன் -  பாக்கிய  ஸ்தானத்தில் கேது, சந்திரன் -  லாப  ஸ்தானத்தில் சனி (வ) -  அயன சயன போக  ஸ்தானத்தில் குரு (வ)  என கிரகங்கள் வலம் வருகின்றன.

பலன்:
மனம் மகிழும் படியான சூழ்நிலையில் இருக்கும் மீன ராசி அன்பர்களே, இந்த மாதம் எதையும் சாதிக்கும் திறமை அதிகமாகும். நினைத்த காரியத்தை நினைத்தபடி நடத்தி முடிக்க முயற்சிகளை மேற்கொள்வீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். தேவையற்ற மனகவலை உண்டாகும். வீண் ஆடம்பர செலவுகளை தவிர்ப்பது நலம் தரும்.
 
குடும்பத்தில் அமைதி குறையலாம். நிதானமாக பேசி பழகுவது நல்லது. கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வது நன்மை தரும். பிள்ளைகள் மீது கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பொருட்களை பாதுகாப்பாக வைப்பது அவசியம்.
 
தொழிலில் இருந்து வந்த நிதி பிரச்சனை நீங்கும். வியாபாரம் தொய்வு நீங்கி சூடுபிடிக்கும். வாடிக்கையாளர்களின் வரவு கண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். தொழிலாளர்கள் உங்கள் மீது திருப்தி அடைவார்கள்.
 
உத்தியோகத்தில் இருப்பவர்கள்  எதையும் குழப்பத்துடனேயே செய்ய நேரிடும். சக ஊழியர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உங்களை சிலர் காட்டிக் கொடுக்க நினைப்பர்.
 
கலைத்துறையினருக்கு நீண்டநாட்களாக இருந்த மன அழுத்தம் நீங்கும்படியான சூழல் உருவாகும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பு இருக்கும். எனினும் கவனமுடன் செயல்படுவது நன்மை தரும்.
 
அரசியல் துறையினருக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கூடுதல் கவனத்துடன் செய்யும் காரியங்கள்  சாதகமான பலன் தரும். மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது.எல்லாவகையிலும் நல்லதே நடக்கும். கிரகங்கள் உங்களுக்கு அனுகூலமான பலனைத் தரும். பணவரத்து அதிகரிக்கும்.
 
பெண்களுக்கு நினைத்த காரியத்தை செய்து முடிக்க எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். வீண் மனக்கவலை உண்டாகும்.
 
மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைப்பதில் தடை ஏற்படலாம். கவனமாக படிப்பது நல்லது.
 
பூரட்டாதி:
இந்த மாதம் குடும்பத்தினர் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். தம்பதிகளிடையே இணக்கம் கூடும். வீட்டில் தடைப்பட்டுவந்த சுபகாரியங்கள் இனிதே நடக்கும். பிள்ளைகளுக்கு திருமண வரன்கள் கை கூடி வரும். தாய்மாமன் வழியில் அனுகூலம் ஏற்படும்.
 
உத்திரட்டாதி:
இந்த மாதம் வீண் சச்சரவுகள் வர வாய்ப்புண்டு. குழந்தை பாக்கியம் கிட்டும். பிள்ளைகள் வீட்டின் நிலையை அறிந்து நடப்பார்கள். பெற்றோர் உடல்நலனில் கவனம் தேவை. உழைப்பதற்குண்டான வாய்ப்புகள் நிறைய கிடைக்கும். தனியார் பணியில் இருப்பவர்கள் அதிகமான வேலைப் பளுவை சந்திப்பார்கள்.
 
ரேவதி:
இந்த மாதம் பங்குதாரர்களிடம் மிகவும் கவனமாக இருக்கவேண்டும். புதிதாக தொழில் தொடங்க போட்ட திட்டம் தள்ளிப்போகும். குடும்பத்தினரிடம் அமைதியாக செல்லவேண்டும். இளைஞர்கள் தகுதிக்கேற்ப புதிய பதவிகளை அடைவார்கள். 
 
பரிகாரம்: நவகிரகத்தில் குருபகவானை முல்லை மலர்சூடி வணங்க  எல்லா நன்மைகளும் உண்டாகும். செல்வநிலை உயரும்..
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - புதன் - வியாழன்
சந்திராஷ்டம தினங்கள்: செப் 10, 11
அதிர்ஷ்ட தினங்கள்: செப் 4, 5.