புதன், 25 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தமிழ் மாதப் பலன்
Written By
Last Updated : சனி, 15 நவம்பர் 2014 (14:41 IST)

கும்பம் - கார்த்திகை மாத ராசி பலன்கள்

எப்பொழுதும் யதார்த்தத்தை விரும்புபவர்களே! உங்களுடைய ராசிநாதன் சனிபகவான் கடந்த ஒரு மாதகாலமாக சூரியனுடன் சேர்ந்திருந்ததால் பணப்பற்றாக்குறை, ஆரோக்ய குறைவு, குடும்பத்திலும் குழப்பங்கள், சின்ன சின்ன அவமானங்களையெல்லாம் நீங்கள் சந்தித்தீர்கள். இப்போது உங்கள் ராசிநாதன் சனிபகவான் வலுவடைந்திருப்பதால் தடைகள் நீங்கும். எதிர்ப்புகள் விலகும். எதிர்பார்த்திருந்த தொகையும் கைக்கு வரும். முன்கோபம் குறையும்.

சுற்றியிருப்பவர்களின் சூழ்ச்சிகளை முறியடித்து முன்னேற வழி வகைகள் கிடைக்கும். பழைய நண்பர்கள் தேடி வருவார்கள். பழைய உறவினர்களும் தேடி வந்துப் பேசுவார்கள். உங்களுடைய ராசிக்கு 6&ம் வீட்டில் குரு மறைந்திருப்பதால் எந்த காரியத்தை தொட்டாலும் தடங்கல் ஆகும். சின்ன சின்ன விஷயங்களாக இருந்தாலும் இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டி வரும். எல்லாவற்றிலும் ஒருவித போராட்டம் இருக்கும். கடன் பிரச்னையால் கௌரவம் குறைந்து விடுமோ என்ற ஒரு பயம் இருந்துக் கொண்டேயிரக்கம். என்னதான் நீங்கள் சிக்கனமாக இருந்தாலும் தவிர்க்க முடியாத செலவுகள் இருந்துக் கொண்டேயிருக்கும்.

நீங்கள் சாதாரணமாகப் பேசுவதைக் கூட சிலர் வேறு அர்த்தத்தில் புரிந்துக் கொள்வார்கள். நீங்கள் தவறாகப் பேசியதாக எல்லோரிடமும் உங்களைப் பற்றிக் குறைக் கூறுவார்கள். வீண் பழிகள் வந்து நீங்கும். ஆரோக்யத்தில் அக்கறைக் காட்டுங்கள். நோய் எதிர்ப்பு சக்தி குறையும். அடிக்கடி சளி, காய்ச்சல் தொந்தரவு, வயிற்று வலி வந்துப் போகும். 22&ந் தேதி முதல் ராசிக்கு 12&ல் செவ்வாய் நுழைவதால் சகோதரங்களால் அலைச்சலும், பிரச்னைகளும் வந்துப் போகும். வீடு, மனை வாங்குவது, விற்பதில் தடைகளும், சிக்கல்களும் வந்துப் போகும்.

சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகள் தாமதமாகும். வழக்கில் அவசரம் வேண்டாம். அவ்வப்போது வழக்கறிஞரை கலந்தாலோசிப்பது நல்லது. இரத்தத்தில் ஹீமோகுளோபின் குறையும். அவ்வப்போது சோர்வு, களைப்பு வந்துப் போகும். ராசிக்கு 10&ல் சூரியன் நுழைந்திருப்பதால் வேலைக் கிடைக்கும். மனைவிவழியில் உதவிகள் வந்து சேரும். உங்களுடைய புதிய திட்டங்களை மனைவி ஆதரிப்பார். எதிர்பாராத பணவரவு உண்டு. உங்கள் யோகாதிபதிகளான சுக்ரனும், புதனும் சாதகமான வீடுகளில் இந்த மாதம் முழுக்க சஞ்சாரம் செய்வதால் எத்தனைப் பிரச்னைகள் வந்தாலும் அதை எதிர்கொண்டு சமாளிக்கும் சக்தி கிடைக்கும். ஷேர் மூலமாகவும் பணம் வரும். புது நண்பர்களாலும் ஆதாயமடைவீர்கள். புது தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் கிட்டும்.

வெளிமாநிலத்தில், அயல்நாட்டிலிருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள். கன்னிப் பெண்களே! உங்களுக்கு இருந்து வந்த உடல் உபாதைகள் நீங்கும். ஆனால் மாதவிடாய்க் கோளாறு, அடிவயிற்றில் வலி வந்துப் போகும். பாரம்பரிய உணவுகளை நீங்கள் மறக்கக் கூடாது. பழங்கள், காய்களை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் சந்தை நிலவரத்தைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப புது முதலீடுகள் செய்வீர்கள். உதவிகளும் வெளியிலிருந்து கிடைக்கும். பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருக்கும்.

இடமாற்றமும் இருக்கும். விரும்பத்தகாத நிகழ்வுகள் நடக்கும். சகிப்புத் தன்மையுடன் தான் நீங்கள் இருக்க வேண்டும். சக ஊழியர்களாலும் சின்ன சின்ன அவமானங்கள் வந்து நீங்கும். மூத்த அதிகாரிகள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள உங்களைப் பகடைக் காயாக உருட்ட வாய்ப்பிருக்கிறது. எனவே உஷாராக இருங்கள். சட்டத்திற்கு புறம்பாக எந்த முயற்சியும் வேண்டாம். கலைத்துறையினரே! இழந்த வாய்ப்புகளை மீண்டும் பெறுவீர்கள். உங்களை விட வயதில் குறைந்தவர்களிடமிருந்து நல்ல வாய்ப்புகள் வரும். முன்கோபத்தையும், ஆடம்பரச் செலவுகளையும் தவிர்க்க வேண்டிய மாதமிது.