புதன், 25 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தமிழ் மாதப் பலன்
Written By
Last Updated : சனி, 15 நவம்பர் 2014 (14:41 IST)

மீனம் - கார்த்திகை மாத ராசி பலன்கள்

இடம்பெயர்ந்து சென்றாலும் குலப்பெருமையை காப்பவர்களே! உங்களுடைய ராசிக்கு தன&பாக்யாதிபதியாகி செவ்வாய் 22&ந் தேதி முதல் உச்சமாகி லாப வீட்டில் அமர்வதால் திடீர் பணவரவு, செல்வாக்கு உண்டு. வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகளும் வி.ஐ.பிகளிடமிருந்து கிடைக்கும். தந்தையாரின் உடல் நிலை சீராகும். பூர்வீக சொத்துப் பிரச்னையும் தீரும். வழக்குகள் சாதகமாக முடிவடையும். சகோதரங்களும் ஆதரவாக இருப்பார்கள்.

ஆனால் ராசிக்குள்ளேயே கேது நிற்பதால் அவ்வப்போது முன்கோபம் அதிகமாகும். பித்தம் அதிகமாகி லேசாக தலைச்சுற்றல் வரும். படபடப்பாக பேசி நல்லவர்களின் நட்பை இழந்துவிடாதீர்கள். 7&ல் ராகு நிற்பதால் மனைவியுடன் கருத்து மோதல், அவருக்கு மாதவிடாய்க் கோளாறு, கர்ப்பப்பை வலி வந்துப் போகும். மனைவிவழி உறவினர்களால் அன்புத் தொல்லையும் அதிகரிக்கும்.

சூரியன் 9&ல் நுழைந்திருப்பதால் சேமிப்புகள் கரையும். தவிர்க்க முடியாத செலவுகள் அதிகரிக்கும். அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை தாமதமின்றி செலுத்தப்பாருங்கள். புதன் சாதகமாக இருப்பதால் ஷேர் மூலம் பணம் வரும். நண்பர்கள் ஆதரவாகப் பேசுவார்கள். உறவினர், நண்பர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். சுக்ரன் சாதகமாக இருப்பதால் விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

வீட்டில் கூடுதலாக ஒரு தளம் அல்லது அறை கட்டுவீர்கள். வங்கி லோன் கிடைக்கும். வெளிமாநிலத்தில், வெளிநாட்டிலிருப்பவர்களால் ஆதாயமடைவீர்கள். அஷ்டமத்துச் சனி நடைபெறுவதால் மற்றவர்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். நீங்களே நேரடியாக சென்று சில காரியங்களை முடிப்பது நல்லது. ஜாமீன், கேரண்டர் கையப்பமிட வேண்டாம். பழைய பிரச்னைகள் தலைத்தூக்கும். வழக்குகளிலும் அலட்சியப் போக்கு வேண்டாம். வாகனத்தில் கவனம் தேவை. இரவு நேரப் பயணங்களை தவிர்ப்பது நல்லது. உங்கள் ராசிநாதன் குருபகவான் 5&ம் வீட்டில் நிற்பதால் செல்வாக்குக் கூடும். உறவினர்கள் மதிப்பார்கள். வி.ஐ.பிகள் வீட்டு விசேஷங்களில் கலந்துக் கொள்வீர்கள். பிள்ளைகளால் நிம்மதி உண்டாகும். தெய்வ பலம் கூடும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நல்ல விதத்தில் முடிப்பீர்கள். திடீர் உதவிகளும் வந்து சேரும். மகளுக்கு திருமணம் கூடி வரும். கன்னிப் பெண்களே! விளையாட்டுத் தனமாக இருக்காதீர்கள். காதல் விவகாரத்தில் எச்சரிக்கையாக இருங்கள்.

நல்லவர்கள் யார், அல்லாதவர்கள் யார் என்பதை உணர்ந்து செயல்படுங்கள். கல்வித் தகுதியை அதிகப்படுத்திக் கொள்வீர்கள். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் லாபம் இரட்டிப்பாகும். போட்டிகளும் குறையும். புது வாடிக்கையாளர்களும் வருவார்கள். புது பங்குதாரர்கள் அறிமுகமாவார்கள். அரசாங்கத்தாலும் வியாபாரத்தை விரிவுப்படுத்த உதவிகள் கிடைக்கும். வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவது நல்லது. உத்தியோகத்தில் இழந்த மரியாதையை மீண்டும் பெறுவீர்கள். இடமாற்றமும் எதிர்பார்த்தபடி கிடைக்கும்.

வேலைச்சுமை குறையும். ஆனால் அஷ்டமத்துச் சனி நடப்பதால் உங்களைப் பற்றிய வதந்திகளும், வீண் பழியும் ஒருபக்கம் உளவிக் கொண்டிருக்கும். உத்தியோகம் சம்பந்தப்பட்ட வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். கலைத்துறையினரே! உங்களின் படைப்புகள் வெளியாகும். புது முயற்சிகள் பலிதமாகும். புதுப்பட வேலைகளும் தொடங்குவீர்கள். தொட்டதெல்லாம் துலங்கும் மாதமிது.