புதன், 25 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தமிழ் மாதப் பலன்
Written By K.‌P. Vidyadaran
Last Modified: சனி, 15 நவம்பர் 2014 (14:48 IST)

மேஷம்-கார்த்திகை மாத ராசி பலன்கள்

ஆக்கும் சக்தி அதிகமுள்ளவர்களே! உங்களுடைய ராசிநாதன் செவ்வாய் சாதகமான வீடுகளில் சஞ்சாரம் செய்வதால் இழுபறியாக இருந்து வந்த வேலைகளெல்லாம் நல்ல விதத்தில் முடியும். அழகு, ஆரோக்யம் கூடும். 22&ந் தேதி முதல் உங்களுடைய ராசிநாதன் உச்சமாவதால் திடீர் பணவரவு உண்டு. ஆளுமைத் திறன் அதிகரிக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களும் அறிமுகமாவார்கள். உங்களுடைய ஆலோசனைகளை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். உங்கள் திறமைகளை குறைத்து மதிப்பிட்டவர்களுக்கெல்லாம் பதிலடித் தருவீர்கள். சொத்துப் பிரச்னை, பாகப்பிரிவினை நல்ல விதத்தில் முடியும். உங்கள் ரசனைக் கேற்ப வீடு, மனை அமையும். திருமணம் கூடி வரும்.

அடுத்தடுத்த சுப நிகழ்ச்சிகளால் வீடு களைக்கட்டும். உங்களின் பூர்வ புண்யாதிபதியான சூரியன் ராசிக்கு 8&ல் மறைந்திருந்தாலும் 20&ந் தேதி முதல் புதன் சூரியனுடன் சேர்வதால் பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டு. அவர்களின் உடல் நிலை சீராகும். மகனுக்கு வேலைக் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். குழந்தை பாக்யம் கிட்டும். தந்தைவழியில் உதவிகள் உண்டு. சுக்ரன் சாதகமான வீடுகளில் செல்வதால் மனைவிவழியில் உதவிகள் கிடைக்கும். மனைவிக்கு இருந்து வந்த முதுகு வலி, மூட்டு வலி நீங்கும். மனைவிக்கு வேலைக் கிடைக்கவும் வாய்ப்பிருக்கிறது. வாகனத்தை சீர் செய்வீர்கள். சிலர் புது வாகனம் வாங்குவீர்கள். ராகு உங்கள் ராசிக்கு 6&ல் நிற்பதால் ஷேர் மூலமாக பணம் வரும்.

எதிர்ப்புகள் குறையும். வழக்குகள் சாதகமாகும். வீடு வாங்குவதற்கு வங்கிக் கடன் உதவி கிடைக்கும். செல்வாக்குக் கூடும். 4&ல் குரு நீடிப்பதால் ஓய்வெடுக்க முடியாதபடி அலைச்சல் இருக்கும். தாயாரின் உடல் நிலை பாதிக்கும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். ஆனால் 22&ந் தேதி முதல் செவ்வாயும், குருவும் நேருக்கு நேர் பார்க்க இருப்பதால் தாய்வழி சொத்துகள் கைக்கு வரும். அரசால் ஆதாயம் உண்டு. சிலருக்கு வேலை அமையும். கண்டகச் சனி நடைபெறுவதால் மனைவியுடன் சின்ன சின்ன கருத்து மோதல்கள் வரும்.

வீண் சந்தேகத்தால் இருவருக்குள் அவ்வப்போது சண்டை, சச்சரவுகள் வந்து நீங்கும். கன்னிப் பெண்களே! முன்கோபம் குறையும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். காதலும் இனிக்கும். திருமணப் பேச்சு வார்த்தையும் கூடி வரும். வியாபாரத்தில் கடந்த மாதத்தை விட இந்த மாதத்தில் லாபம் அதிகரிக்கும். வேலையாட்களாக இருந்து வந்த பிரச்னைகள் குறையும். பங்குதாரர்கள் பணிவார்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். சிலர் கடையை வேறு இடத்திற்கு மாற்றுவீர்கள்.

கடையை அழகுப்படுத்துவீர்கள். விரிவுப்படுத்துவீர்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். மூத்த அதிகாரிகள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். சக ஊழியர்களுடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் நீங்கும். எதிர்பார்த்த இடமாற்றமும் கிடைக்கும். கண்டகச் சனி இருப்பதால் ஒருபக்கம் மறைமுக எதிர்ப்புகள் இருந்துக் கொண்டிருக்கும். கலைத்துறையினரே! வெளியிடப் படாமல் இருந்த உங்களுடைய படைப்புகள் ரிலீசாகும். சம்பள பாக்கி கைக்கு வரும். போட்டிகளையும், சவால்களையும் முறியடித்து முன்னேறும் மாதமிது.