புதன், 25 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தமிழ் மாதப் பலன்
Written By K.‌P. Vidyadaran
Last Modified: சனி, 15 நவம்பர் 2014 (14:37 IST)

சிம்மம் - கார்த்திகை மாத ராசி பலன்கள்

எதிலும் உடனடித் தீர்வை விரும்புபவர்களே! உங்களின் ராசிக்கு 3&ம் வீட்டிலேயே சனிபகவான் நிற்பதால் எத்தனைப் பிரச்னைகள் வந்தாலும் அதை எதிர்கொண்டு சமாளிக்கும் சக்தி கிடைக்கும். வி.ஐ.பிகளின் ஆதரவுப் பெருகும். எதிர்பாராத பணவரவு உண்டு. மனைவிவழியில் உதவிகள் கிடைக்கும். உங்களுடைய புதிய திட்டங்களை மனைவி ஆதரிப்பார். கணவன்&மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். குழந்தை பாக்யமும் உண்டு. உயர்ரக ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். புதிய முயற்சிகள் பலிதமாகும். ஷேர் மூலமாகப் பணம் வரும்.

மாறுபட்ட அணுகுமுறை மற்றும் இங்கிதமானப் பேச்சால் கடினமான காரியங்களைக் கூட எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். அனுபவ அறிவு, பொது அறிவு வளரும். உங்களுடைய ராசிக்கு யோகாதிபதியான குரு 12&ல் மறைந்துக் கிடப்பதால் எவ்வளவு வருமானம் வந்தாலும் செலவுகள் அதிகமாகும். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். கோவில் நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள். ஊரில் மரியாதைக் கூடும். கடந்த ஒருமாத காலமாக உங்களுடைய ராசிநாதன் சூரியன் சனியுடன் சேர்ந்திருந்ததால் முதுகு வலி, வயிற்று வலி, சோர்வு, களைப்புடன் காணப்பட்டீர்கள்.

தூக்கம் இல்லாமல் போனது. உணர்ச்சிவசப்பட்டீர்கள். இப்போது உங்கள் ராசிநாதன் சூரியன் குருவின் பார்வைப் பெற்று 4&வது வீட்டில் கேந்திர பலம் பெற்று அமர்ந்திருப்பதால் ஆரோக்யம், அழகுக் கூடும். வேலைக்கு விண்ணப்பித்து காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். உங்களுடைய நிர்வாகத் திறமைக் கூடும். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு உண்டு. நண்பர்களுடன் இருந்த மோதல் விலகும். பிரபலங்களுக்கு நெருக்கமாவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. ஆனால் உங்கள் ராசிக்கு 2&ல் ராகு நிற்பதால் கண் வலி வந்துப் போகும். அக்கம்&பக்கம் வீட்டாருடன் சிறுசிறு கருத்து மோதல்கள் வரக்கூடும். ராசிக்கு 8&ல் கேது நிற்பதால் குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும்.

சில நேரங்களில் ஈகோப் பிரச்னைகளும் தலைத்தூக்கம். விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. உங்கள் யோகாதிபதி செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால் வீடு, மனை உங்கள் ரசனைக் கேற்ப அமையும். மனை வாங்குவது, விற்பது நல்ல விதத்தில் முடியும். சகோதர வகையில் இருந்த பிணக்குகள் நீங்கும். கன்னிப் பெண்களே! உயர்கல்வியில் ஆர்வம் உண்டாகும். காதல் விவகாரத்தில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். சிலருக்கு உங்களுடைய எதிர்பார்ப்புகளுக்கேற்ப வரனும் வந்தமையும். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். புது முதலீடும் செய்வீர்கள். புது வாடிக்கையாளர்களும் அறிமுகமாவார்கள்.

விளம்பர யுக்திகளையும் கையாண்டு லாபம் ஈட்டுவீர்கள். பங்குதாரருடன் இருந்த மோதல்கள் குறையும். வேலையாட்களும் உங்களைப் புரிந்துக் கொண்டு வேலைப் பார்ப்பார்கள். புது ஒப்பந்தங்கள் கூடி வரும். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் உங்களுக்கு ஒத்தாசையாக இருப்பார்கள். சக ஊழியர்களுடன் இருந்த கருத்து மோதல்கள் நீங்கும். சிலருக்கு புது வேலைக் கிடைக்கும். புது சலுகைகளும் கிட்டும். கலைத்துறையினரே! புகழடைவீர்கள். வருமானம் அதிகரிக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும் மாதமிது.