புதன், 25 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தமிழ் மாதப் பலன்
Written By
Last Updated : வியாழன், 16 அக்டோபர் 2014 (15:26 IST)

மீனம் - ஐப்பசி மாத ராசி பலன்கள்

மன்னிக்கும் குணம் கொண்ட நீங்கள் மற்றவர்கள் மதிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். உங்களின் தன-பூர்வ புண்யாதிபதியான செவ்வாய் 10-ம் வீட்டில் கேந்திர பலம் பெற்று அமர்ந்திருப்பதால் உங்களுடைய ஆளுமைத் திறன் அதிகரிக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள்.

செல்வாக்குக் கூடும். மறைந்திருந்த திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். ஷேர் மூலமாக பணம் வரும். சகோதரங்கள் ஆதரவாக இருப்பார்கள். பிள்ளைகள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். உங்கள் ரசனைக் கேற்ப வீடு, மனை அமையும். பூர்வீக சொத்துப் பிரச்னையும் கட்டுப்பாட்டிற்குள் வரும். சுக்ரனும், புதனும் சாதகமான வீடுகளில் செல்வதால் மனைவிவழியில் உதவிகள் உண்டு. புது டிசைனில் ஆபரணம் வாங்குவீர்கள்.

பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். வீடு கட்டும் பணி விரைவடையும். வங்கிக் கடன் கிடைக்கும். சூரியனும், சனியும் 8-ல் நிற்பதால் தந்தைவழி உறவினர்களால் அலைச்சலும், செலவினங்களும் இருக்கும். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். உறவினர்கள், நண்பர்களின் அன்புத் தொல்லை அதிகமாகும். ராகுவும், கேதுவும் சரியில்லாததால் ஆரோக்யத்தில் அக்கறைக் காட்டுங்கள். மனைவிக்கு மாதவிடாய்க் கோளாறு, முதுகு வலி, மூட்டு வலி வந்துப் போகும்.

குரு சாதகமாக இருப்பதால் எத்தனைப் பிரச்னைகள் வந்தாலும் அதை எதிர்கொண்டு சமாளிக்கும் சக்தி கிடைக்கும். குழந்தை பாக்யம் உண்டு. வழக்கு சாதகமாகும். கன்னிப் பெண்களே! மனஇறுக்கங்கள் நீங்கும். நல்லவர்களின் நட்பு கிடைக்கும். பாதியில் நின்ற கல்யாணப் பேச்சு வார்த்தை சுமூகமாக முடியும்.

உயர்கல்வியில் முன்னேறுவீர்கள். வியாபாரத்தில் இருந்து வந்த சிக்கல்கள், பிரச்னைகள் தீரும். கடையை மாற்றுவீர்கள். உணவு, மருந்து, லெதர் போன்ற வகைகளால் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். 10-ல் செவ்வாய் நிற்பதால் சிலருக்கு புது வேலைக் கிடைக்கும். அஷ்டமத்துச் சனி தொடர்வதால் சில நேரங்களில் அதிகாரிகளுடன் மோதல் வரும். கலைத்துறையினரே! தடைப்பட்ட வேலைகள் முடிவடையும். வயதில் குறைந்த கலைஞர்களால் ஆதாயமடைவீர்கள். திடீர் பயணங்களாலும், செலவுகளாலும் திணறும் மாதமிது.