புதன், 25 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தமிழ் மாதப் பலன்
Written By
Last Updated : வியாழன், 16 அக்டோபர் 2014 (15:25 IST)

மகரம் - ஐப்பசி மாத ராசி பலன்கள்

எதையும் ஆழமாக யோசிக்கும் நீங்கள், பல விஷயங்களை அடிமனதிலேயே பதுக்கி வைப்பீர்கள். உங்கள் ராசிக்கு 3-ல் கேது நிற்பதால் தொட்ட காரியங்கள் துலங்கும். தடைகளெல்லாம் நீங்கும். ஷேர் மூலம் பணம் வரும். எதிர்பார்த்து ஏமாந்துப் போன தொகையும் கைக்கு வரும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தையும் தந்து முடிப்பீர்கள். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள்.

குரு உங்களுடைய ராசியைப் பார்த்துக் கொண்டிருப்பதால் பிரபலங்கள் அறிமுகமாவார்கள். உற்சாகமாக காணப்படுவீர்கள். தள்ளிப் போன திருமணம் கூடி வரும். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். உங்களின் பிரபல யோகாதிபதிகளான சுக்ரனும், புதனும் சாதகமான வீடுகளில் சஞ்சாரம் செய்வதால் உங்கள் செல்வாக்கு ஒருபடி உயரும். விலை உயர்ந்த தங்க ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

நண்பர்கள், உறவினர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். உங்கள் ராசிநாதன் சனியுடன் சூரியனும் சேர்ந்திருப்பதால் வேலைச்சுமை அதிகமாகும். குடும்பத்தினருடன் பேசுவதற்கு கூட முடியாமல் திணறுவீர்கள். உங்கள் ராசிக்கு 12-ல் செவ்வாய் நிற்பதால் சகோதரங்களால் அலைச்சலும், செலவினங்களும் இருக்கும்.

வீடு, மனை விற்பது, வாங்குவதில் கவனம் தேவை. அவசர முடிவுகள் வேண்டாம். கன்னிப் பெண்களே! உங்களின் நீண்ட நாள் ஆசை நிறைவேறும். அழகு, இளமைக் கூடும். எதிர்பார்த்தபடி திருமணம் முடியும். சிலருக்கு வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். கமிஷன், புரோக்கரேஜ், ஸ்டேஷனரி, தங்க ஆபரணங்கள், துணி வகைகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் செல்வாக்குக் கூடும். வேலைச்சுமை இருந்தாலும் அதிகாரிகளின் ஆதரவுக் கிடைக்கும்.

சில நுணுக்கங்களையெல்லாம் தெரிந்துக் கொள்வீர்கள். கலைத்துறையினரே! யதார்த்தமான படைப்புகளால் பரிசு, பாராட்டுப் பெறுவீர்கள். வசதி, வாய்ப்புகள் பெருகுவது, நீண்ட நாள் பிரச்னைகளும் தீரும் மாதமிது.