1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தமிழ் மாதப் பலன்
Written By
Last Updated : வியாழன், 20 செப்டம்பர் 2018 (13:33 IST)

மிதுனம்: புரட்டாசி மாத ராசி பலன்கள்

(மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை,  புனர்பூசம் 1, 2, 3 பாதம்). கிரக நிலைகள்: செப்டம்பர் மாதம் 17 ந் தேதி இதுவரை உங்கள் ராசிக்கு தைரிய, வீரிய ஸ்தானத்தில் இருந்த சூரிய பகவான் சுக  ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். அக்டோபர் 3 ந்தேதி சுக ஸ்தானத்தில் இருந்த புதன் பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். 

மேலும் அக்டோபர் 4 ந்தேதி இரவு  பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருந்த குருபகவான் ரண, ருண, ரோக  ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார். அக்டோபர் 11ந்தேதி பூர்வ, புண்ணிய ஸ்தானத்தில்  இருக்கும் சுக்கிரபகவான் வக்கிரம் ஆகிறார்.
 
பலன்: எல்லாவற்றிலும் ஒரு பயத்துடனே செயல்படும் மிதுன ராசி அன்பர்களே! இந்த மாதம்   புதியநபர்களின்  நட்பு உண்டாகும். வீடு வாகனம்  தொடர்பான  விஷயங்களில்  கூடுதல் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் எவ்வளவு திறமையாக செயல்பட்டாலும் மெத்தனமான போக்கு  காணப்படும்.
 
குடும்பத்தில் சில சட்டச் சிக்கல்கள் வந்து போகும். உறவினர் வருகையால் கலகம் உண்டாகும். இந்த மாதம் குருபெயர்ச்சிக்கு முன்னதாக உங்கள் பிரச்சினைகளை குருபகவான் தீர்த்து விட்டு நகருவார். அதன்பின் உங்களுக்கு நன்மைகள் ஏராளமாய் நடக்கும். பொருளாதார நிலையில் நீண்ட நாட்களாக வர  வேண்டிய  பணம் இப்போது கைக்கு வந்து சேரும்.
 
தொழில் ஸ்தானத்தில் சூரியன், புதன் ஆகியோரின் பார்வை படுவதால் தொழிலில் புதிய யுக்திகளை கற்றுக் கொள்வீர்கள். தொழிலை கையாளும் போது அது உங்களுக்கு சாதகமாகும்.
 
உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பார்கள். சிலர் உங்களை மேலிடத்தில் குறை கூற வாய்ப்புண்டு கவனம் தேவை. பெண்கள் விரும்பிய ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். உங்கள் உறவினர்கள் உறுதுணையாக இருப்பார்கள். மாணவர்களுக்கு படிப்பில் இருந்த தடைகள் நீங்கும். எதிர்பாலினத்தாரிடம் தேவையில்லாத வாக்கு வாதங்களில் ஈடுபட வேண்டாம்.
 
கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவீர்கள். நல்ல சூழ்நிலைகள் அமையப் பெற்று அதனால் மன மகிழ்ச்சி உண்டாகலாம். மூத்த கலைஞர்கள் நல் ஆசி வழங்குவார்கள். உங்கள் பேச்சுக்கு மதிப்பு இருக்கும்.
 
அரசியல்வாதிகள் அரசு சம்மந்தமான பிரச்சனைகளை மற்றவருடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பது நல்லது. யாரிடமும் எதைப்பற்றியும் விவாதிக்க வேண்டாம். சில விஷமிகளின் தொந்தரவு இருந்தாலும் சுலபமாக சமாளித்து விடுவீர்கள்.
 
மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள்: இந்த மாதம் எதிலும் கவனமாக இருப்பது நல்லது. காரிய தடை தாமதம் நீங்கும். குடும்பத்தில் இருக்கும் குழப்பம் நீங்கும். விருப்பத்திற்கு மாறாக காரியங்கள் நடக்கலாம். பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது.  அடுத்தவருடன் சில்லறை சண்டைகள் ஏற்படலாம்.
 
திருவாதிரை: இந்த மாதம் வயிறு தொடர்பான  நோய் ஏற்படலாம். பணவரத்து இருக்கும். பயணங்கள் மகிழ்ச்சி தருவதாக இருக்கும். தொழில் வியாபாரத்தில்  ஈடுபட்டு இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக ஊழியர்களுடன்   வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.
 
புனர்பூசம் 1, 2, 3 பாதம்: இந்த மாதம் குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்பாடுகள் உங்களது  கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம். அனுசரித்து செல்வது  நல்லது. கணவன், மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் முன்னேற்றத்திற்காக பாடுபடுவீர்கள்.
 
பரிகாரம்: வியாழக்கிழமைகளில் சிவன் கோவிலை வலம் வரவும். 
 
சந்திராஷ்டம தினங்கள்: செப்டம்பர் 20, 21; அக்டோபர் 17.
 
அதிர்ஷ்ட தினங்கள்: அக்டோபர் 10, 11.
 
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வியாழன்.