செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ‌ட்ரெ‌ய்ல‌ர்
Written By siva
Last Updated : திங்கள், 11 ஜனவரி 2021 (13:21 IST)

விஜய்சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’: அட்டகாசமான டீசர் வெளியீடு

விஜய்சேதுபதியின் ‘துக்ளக் தர்பார்’: அட்டகாசமான டீசர் வெளியீடு
விஜய் சேதுபதி மற்றும் பார்த்திபன் முக்கிய வேடங்களில் நடித்த ’துக்ளக் தர்பா’ர் படத்தின் டீஸர் சற்று முன் வெளியாகி உள்ளது. இந்த டீசரில் பார்த்திபன் மற்றும் விஜய் சேதுபதி ஆகிய இருவர் இடையே நடக்கும் ஆடுபுலி ஆட்டம் தான் கதை என்று தெரிகிறது 
 
விஜய்சேதுபதி, பார்த்திபன் ஆகிய இருவரும் அட்டகாசமாக மாறி மாறி நடிப்பில் ஸ்கோர் செய்கின்றனர். இவர்கள் இருவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் சுவாரஸ்யமாக இருக்கும் என கருதப்படுவதால் இந்த படம் நிச்சயம் வெற்றிபெறும் என்று தெரிகிறது
 
குறிப்பாக விஜய் சேதுபதியின் மாஸ் வசனங்களும் பார்த்திபனை அவர் பழிவாங்க எடுக்கும் ஒவ்வொரு ஸ்டெப்பும் டீசரில் உள்ளன. மஞ்சிமா மோகன் மற்றும் ராஷிகண்ணா ஆகிய இரண்டு கதாநாயகிகள் நடிக்கும் இந்த படத்திற்கு கோவிந்த வசந்தா இசையமைத்து உள்ளார். விஜய் சேதுபதி படம் என்றாலே சிறப்பாக இசை வைக்கும் கோவிந்த் வசந்தா இந்த படத்திலும் தூள் கிளப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கியிருக்கும் இந்தப் படம் இன்னும் ஓரிரு மாதங்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது