ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ‌ட்ரெ‌ய்ல‌ர்
Written By
Last Updated : வெள்ளி, 31 மே 2019 (19:03 IST)

கெத்து காட்டும் சிம்பன்ஸி! ஓ.பி.எஸ் - யை கலாய்க்கும் "கொரில்லா" ட்ரைலர்!

நடிகர் ஜீவாவின் நடிப்பில் வித்தியாசமான கதையம்சத்தில் உருவாகிவரும் கொரில்லா படத்தின் ட்ரைலர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 
 
தமிழ் சினிமாவில் வளர்ந்து கதாநாயகன்களில் மிக முக்கியமான நடிகராக பார்க்கப்படுபவர் நடிகர் ஜீவா. இருந்தாலும் அவரால் முன்னணி நடிகராக வரமுடியவில்லை. படவாய்ப்புகள் அவருக்கு கிடைக்கவில்லை என்பதையும் தாண்டி அவர் நடிப்பில் வெளிவரும் படங்கள் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை. 
 
தற்போது ஜீவா கொரில்லா படத்தில் நடித்துவருகிறார். டான் சாண்டி இயக்கியுள்ள இப்படத்தில் ஷாலினி பாண்டே ஜீவாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, சதீஸ் உள்ளிட்ட நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் சிம்பன்ஸி குரங்கு ஒன்று இப்படத்தில் நடித்து மாஸ் காட்டியிருக்கிறது. இதனாலே இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
 
இந்நிலையில் சற்றுமுன் இப்படத்தின் ட்ரைலர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.