அருள்நிதி நடிப்பில் இரவுக்கு ஆயிரம் கண்கள் திரைப்படத்தின் டீசர் வெளியீடு!

Sasikala| Last Modified சனி, 3 ஜூன் 2017 (15:09 IST)
அருள்நிதி நடிப்பில் உருவாகிவரும் ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. அறிமுக இயக்குநர் மு.மாறன் இயக்கிருக்கும் இந்த திரைப்படத்தில் மகிமா, ஆனந்த் ராஜ், அஜ்மல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

 
அருள்நிதிக்கு ஜோடியாக சாட்டை புகழ் மகிமா நம்பியார் நடித்துள்ளார். இவர்களுடன் ஆனந்தராஜ், அஜ்மல், சுஜா வருநீ, சாயா  சிங், லக்ஷ்மி ராமகிருஷ்ணன் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. க்ரைம் த்ரில்லராக படம் உருவாகி வருகிறது.  இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்து வருகிறார்.
 
ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் சார்பாக டில்லி பாபு தயாரித்திருக்கும் இந்த திரைப்படத்தின் டீசரை, சிம்பு இன்று  ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

 


இதில் மேலும் படிக்கவும் :