வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Geetha Priya
Last Modified: வியாழன், 28 ஆகஸ்ட் 2014 (15:46 IST)

ஸ்ருதி இடத்தில் தமன்னா - தயாரிப்பாளர் திடீர் முடிவு

தெலுங்கின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவர் பெல்லம் கொண்டா சுரேஷ். இந்திய சினிமா இலக்கணப்படி தனது மகனை நாயகனாக்கி படங்கள் தயாரித்து வருகிறார். மகனின் பெயர் பெல்லம் கொண்டா சீனிவாஸ்.
முன்னணி மாஸ் ஹீரோக்கள் தவிர்த்து வேறு யாருடனும் நடிக்க தயங்கும் முன்னணி நடிகைகள் பெல்லம் கொண்டா சீனிவாசுடன் நடிக்க மட்டும் தயக்கம் காட்டுவதில்லை.
இந்நிலையில் தனது தயாரிப்பில் தனது மகன் நடிக்கும் புதுப்படத்தில் நடிக்க ஸ்ருதியை ஒப்பந்தம் செய்தார் பெல்லம் கொண்டா சுரேஷ். படம் தொடங்கயிருக்கும் நிலையில் திடீரென அவர் மாற்றப்பட்டு தமன்னாவை ஒப்பந்தம் செய்தார். இந்த மாற்றத்துக்கான காரணம் தெரியவில்லை.
 
இந்தப் படத்தில் நடிக்க தமன்னாவுக்கு ஒரு கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது.