வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Geetha Priya
Last Modified: வியாழன், 28 ஆகஸ்ட் 2014 (17:34 IST)

விஷாலின் சவுண்ட் ஃபேக்டரி

விஷால் ஃபிலிம் ஃபேக்டரி என்று தனது பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய விஷால், விஷால் சவுண்ட் ஃபேக்டரி என்ற பெயரில் ஆடியோ நிறுவனம் ஒன்றையும் ஆரம்பித்துள்ளார்.
விஷால் தயாரிக்கும் படங்களின் பாடல்கள் இனி விஷால் சவுண்ட் ஃபேக்டரி வெளியீடாக வரும். அவர் நடித்து தயாரித்து வரும் பூஜை படத்தின் பாடல்கள் இந்த புதிய நிறுவனம் வழியாக வெளியிடப்படும். நாளை தனது பிறந்தநாளை முன்னிட்டு இந்த புதிய நிறுவனத்தை விஷால் அறிவிக்க உள்ளார்.
 
பூஜை படத்தின் வேலைகள் வேகமாக நடந்து வருகிறது. ஆகஸ்ட் 31 யுவனின் பிறந்த நாளுக்கு பாடல்களை வெளியிட்டு செப்டம்பர் 5 -ஆம் தேதி பர்ஸ்ட் லுக் டீஸரை வெளியிட முடிவு செய்துள்ளனர். தீபாவளிக்கு படம் வெளியாகிறது.
 
தீபாவளிக்கு ஐ, கத்தி படங்களும் வெளிவர இருப்பதால் பூஜை படத்தின் வெளியீடு கடைசி நேரத்தில் மாற்றப்பட வாய்ப்பு உள்ளது.