வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Geetha priya
Last Modified: சனி, 2 ஆகஸ்ட் 2014 (11:45 IST)

மேலும் ஐந்து குழந்தைகளை தத்தெடுக்கும் ஹன்சிகா

வரும் ஆகஸ்ட் 9 தனது பிறந்த நாளன்று மேலும் ஐந்து குழந்தைகளை தத்தெடுக்கிறார் நடிகை ஹன்சிகா.
ஹன்சிகாவுக்கு இது 24 -வது வயது. இந்த வயதில் அவர் 25 குழந்தைகளை தத்தெடுத்துள்ளார். இந்த குழந்தைகளின் படிப்பு, உணவு, உடை, கல்வி என அனைத்துச் செலவுகளும் ஹன்சிகாவுடையது. 
 
இந்த கோடை விடுமுறைக்கு தான் தத்தெடுத்த 25 குழந்தைகளில் 23 குழந்தைகளை குலுமணாலிக்கு அழைத்துச் சென்றார் ஹன்சிகா. இரண்டு குழந்தைகளுக்கு குளிர் ஒத்துக் கொள்ளாது என்பதால் அவர்களை அழைத்துச் செல்லவில்லை.
 
அடுத்த வருடம் இந்த 25 குழந்தைகளையும் வெளிநாடுகளுக்கு சுற்றுலா அழைத்துச் செல்வதற்காக அவர்களுக்கு பாஸ்போர்ட் எடுக்கும் முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளார்.
 
இந்நிலையில் வரும் ஆகஸ்ட் 9 தனது பிறந்த நாளன்று மேலும் 5 குழந்தைகளை அவர் தத்தெடுக்க உள்ளார்.
 
ஐம்பது பைசா பென்சில் தந்து அதற்கொரு விழாவும் எடுக்கும் பன்ச் டயலாக் பஞ்ச ஹீரோக்களுக்கு மத்தியில் ஹன்சிகாவின் உதவி மெச்சத்தக்கது, ஹன்சிகா போற்றுதலுக்குரியவர்.