வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Geetha Priya
Last Modified: திங்கள், 22 செப்டம்பர் 2014 (11:48 IST)

மீண்டும் சென்னை, மீண்டும் சால்ட் அண்ட் பெப்பர்

அஜீத் கௌதம் இயக்கத்தில் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு விரைவில் மீண்டும் சென்னையில் தொடங்குகிறது. அதில் மீண்டும் சால்ட் அண்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலில் தோன்றுகிறார் அஜீத்.
இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி தொடர்ந்து நடந்தது. முதலில் அஜீத், அனுஷ்கா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டன. அதில் அஜீத் சால்ட் அண்ட் பெப்பர் தலைமுடியுடன் மீசையில்லாமல் நடித்தார்.
 
அதன் பிறகு த்ரிஷாவுடனான பிளாஷ்பேக் காட்சிகள் படமாக்கப்பட்டன. அதில் அடர்ந்த கறுப்பு மீசை மற்றும் கருப்பு தலைமுடியுடன் அஜீத் நடித்தார். சென்னையை தொடர்ந்து வடஇந்தியாவில் உள்ள சிக்கிம், டெல்லி, சண்டிகர், ஜோ‌த்பூர் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடந்தது. தற்போது வடஇந்திய ஷெட்யூல் முடிந்து சென்னை திரும்பியுள்ளது பட யூனிட்.
 
விரைவில் தொடங்கயிருக்கும் சென்னை ஷெட்யூலில் அஜீத் சால்ட் அண்ட் பெப்பர் தலைமுடியுடன் மீசையில்லாமல் நடிக்க உள்ளார். அனுஷ்காவும் சென்னை ஷெட்யூலில் கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.