1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Ravivarma
Last Modified: திங்கள், 21 ஜூலை 2014 (19:52 IST)

பேட் பாய்ஸ் தனுஷ், சிம்பு

வேலையில்லா பட்டதாரியுடன் எஸ்டிஆரின் (சிம்பு) வாலு படத்தின் ட்ரெய்லரை வெளியிட்டுள்ளனர். இரண்டிலும் வசனம் முதற்கொண்டு பல ஒ‌ற்றுமைகள்.
முன்பெல்லாம் ஹீரோ நல்லவனாக இருக்க வேண்டும். நற்குணங்களின் சுரங்கமாக இருந்தால் மட்டுமே அவர் ஹீரோ. இன்று நிலைமை மாறிவிட்டது. ஹீரோவாக நடிப்பவர் கேமராவுக்கு அருகில் வந்து ஆடியன்ஸைப் பார்த்து நான் ரொம்ப கெட்டவன் என்கிறார். கெட்டுப் போனால்தான் இப்போதெல்லாம் ஹீரோ.
 
வேலையில்லா பட்டதாரியில் நான் பேட் பாய் என்று வசனம் பேசுகிறார் தனுஷ். படத்தின் இடைவேளையில் வாலு ட்ரெய்லர் திரையில் ஓடியது. அதன் இறுதியில் அதே டயலாக்கை சிம்பு ரிப்பீட் செய்தார். நான் பேட் பாய்.
 
கெட்ட பையனாக இருப்பதில் இருவருக்கும் அப்படியென்ன ஆர்வமோ.