வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Geetha Priya
Last Modified: திங்கள், 22 செப்டம்பர் 2014 (11:36 IST)

பத்து லட்சத்தை தாண்டிய கத்தி

வெளியிட்ட இரண்டே நாளில் கத்தி படத்தின் டீஸரை பத்து லட்சத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் பார்த்துள்ளனர்.
முருகதாஸ் இயக்கியிருக்கும் கத்தியில் விஜய் இரு வேடங்களில் நடித்துள்ளார். சமந்தா ஹீரோயின். அனிருத் இசையில் பாடல்கள் ஏற்கனவே ஹிட்டாகியுள்ளன. 
 
இதன் டீஸர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. வழக்கம் போல ஒரு குரூப் டீஸரை இணையத்தில் கிண்டலடித்து வருகிறது. விஜய் படம் சம்பந்தப்பட்ட எது வெளியானாலும் கிண்டல் செய்வதுதான் இந்த குரூப்பின் வழக்கம்.
 
அதேநேரம் ரசிகர்கள் கத்தி டீஸரை விரும்பி பார்த்து வருகின்றனர். இரண்டு தினங்களில் பத்து லட்சத்துக்கும் அதிகமானோர் கத்தி டீஸரை பார்த்துள்ளனர்.
 
இதற்கு முன் முருகதாஸ் - விஜய் இணைந்து உருவாக்கிய துப்பாக்கி சூப்பர்ஹிட்டானதால் கத்திக்கு எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது.
 
தீபாவளிக்கு கத்தி திரைக்கு வருகிறது.