1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Geetha Priya
Last Modified: வியாழன், 28 ஆகஸ்ட் 2014 (17:19 IST)

நாளை லிங்கா படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர்

லிங்கா படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரை நாளை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியிடுகின்றனர்.
லிங்கா படத்தின் படப்பிடிப்பு பல்வேறு தடங்கல்களுக்கு நடுவில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தை டிசம்பர் 12 ரஜினியின் பிறந்தநாளில் திரைக்கு கொண்டு வருவதில் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரும், தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷும் உறுதியாக உள்ளனர். 
 
இந்நிலையில் படத்தின் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டரை நாளை விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வெளியிடுகின்றனர். இந்தத் தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் ராக்லைன் வெங்கடேஷ் உறுதி செய்துள்ளார்.