1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Geetha Priya
Last Modified: சனி, 30 ஆகஸ்ட் 2014 (11:50 IST)

நயன்தாராவை நிஜமாகவே கடத்திய விஜய் சேதுபதி

சமீபத்தில் நடந்த விருது விழாவில், நீங்க ஒரு ஹீரோயினை கடத்துவதாக இருந்தால் யாரை கடத்துவீங்க என்று விஜய் சேதுபதியிடம் கேட்கப்பட்டது. மனிதர் யோசிக்கவேயில்லை.

பட்டென்று நயன்தாரா என்றார். அவ்ளோ இஷ்டமாம் நயன்தாரா மீது. சொன்னதோடு இல்லாமல் மனிதர் நயன்தாராவை கடத்தியும் விட்டார். புரியலை...?
 
நயன்தாராவுடன் ஜோ‌டியாக நடிக்கிறார் விஜய் சேதுபதி.
இந்த அரிய வாய்ப்பை அவருக்கு வழங்கியவர் தனுஷ். அவரது வுண்டர்பார் தயாரிக்கும், நானும் ரவுடிதான் படத்தில் விஜய் சேதுபதி ஹீரோ, நயன்தாரா ஹீரோயின். அனிருத் இசை, ராஜா ராணி ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு. படத்தை இயக்குகிறவர் போடா போடியை இயக்கிய விக்னேஷ் சிவா.
 
சே... இப்போதெல்லாம் ரவுடிகளுக்குதான் லக் அடிக்கிறது.