1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Geetha Priya
Last Modified: வெள்ளி, 18 ஜூலை 2014 (18:20 IST)

ஜெய் - ஆண்ட்ரியா நடிக்கும் வலியவன்

எங்கேயும் எப்போதும், இவன் வேற மாதிரி படங்களை இயக்கிய சரவணன் ஜெய் நடிக்கும் படத்தை இப்போது இயக்கி வருகிறார். ஆண்ட்ரியா ஹீரோயின். 
 
சரவணனின் இரண்டு படங்களுமே வெற்றி பெற்றன. அடுத்து அவர் விக்ரமை வைத்து படம் செய்யப் போவதாகவும், விக்ரமிடம் கதை சொல்ல இருப்பதாகவும் பலமாக பேசப்பட்டது. இந்நிலையில் தனது முதல்பட ஹீரோ ஜெய்யை வைத்து அடுத்தப் படத்தை தொடங்குவதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து எங்கேயும் எப்போதும் படத்தில் ஜெய்யுடன் நடித்த அஞ்சலியே இந்தப் புதிய படத்திலும் நடிப்பார் என வதந்தி கிளம்பியது. ஆனால் அஞ்சலிக்குப் பதில் ஆண்ட்ரியாவை ஒப்பந்தம் செய்தார் சரவணன்.
 
இவன் வேற மாதிரி போலவே காதல், ஆக்ஷன் கலந்த படமாக இது தயாராகி வருகிறது. படத்துக்கு வலியவன் என்று சரவணன் பெயர் வைத்துள்ளார்.