வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Geetha Priya
Last Modified: செவ்வாய், 9 செப்டம்பர் 2014 (14:55 IST)

சித்தார்த் ஒரு ஜுனியர் கமல்

சினிமாவில் அனைவரும் ஜுனியர் ரஜினி, அடுத்த சூப்பர் ஸ்டார் ஆவதற்கு கடும் பிரயத்தனத்தில் இருக்கையில் சித்தார்த்தை ஜுனியர் கமல் என பாராட்டியுள்ளார் தயாரிப்பாளர் சிவா.
சித்தார்த்துக்கு தமிழில் வெரைட்டியான கதாபாத்திரங்கள் கிடைக்கின்றன. ஜிகிர்தண்டாவுக்குப் பிறகு வெளியாகவுள்ள காவியத்தலைவனில் முற்றிலும் வித்தியாசமான வேடத்தில் நடித்துள்ளார். தற்போது நடித்து வரும் லூசியா கன்னடப் படத்தின் தமிழ் ரீமேக்கில் முந்தைய இரு படங்களிலிருந்து அப்படியே மாறுபட்ட வேடம்.
 
இந்த ரீமேக்குக்கு கமல் நடிப்பில் வெளியான எனக்குள் ஒருவன் படத்தலைப்பை பெயராக்கியுள்ளனர். இதுபற்றி குறிப்பிட்ட தயாரிப்பாளர் சிவா, கமல் படத்தின் பெயரை சித்தார்த் நடிக்கும் படத்துக்கு வைத்தது பொருத்தமானதுதான். சித்தார்த் ஒரு ஜுனியர் கமல் என்று பாராட்டினார்.
 
எனக்குள் ஒருவனை சி.வி.குமார் தனது திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட் சார்பில் தயாரித்து வருகிறார்.