1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Geetha Priya
Last Modified: செவ்வாய், 23 செப்டம்பர் 2014 (17:10 IST)

காஷ்மீர் வெள்ள நிவாரணம் - ஸ்ருதியின் உதவியும், வேண்டுகோளும்

ஸ்ருதியின் காட்டில் இப்போது பெருமழை. அவர் நடித்த தெலுங்குப் படங்கள் வரிசையாக வெற்றிக்கொடி நாட்டுகின்றன. இந்தியிலும் நல்ல வாய்ப்புகள். தமிழில் விஜய் ஜோ‌டியாக விரைவில் நடிக்கிறார்.
வெற்றி நடிகையான பிறகு ஸ்ருதியின் பேச்சுக்கும் கவனிப்பு கிடைக்கிறது.
 
காஷ்மீர் வெள்ள சேதத்துக்கு மத்திய அரசு நிவாரண நிதி திரட்டி வருகிறது அல்லவா? அதற்கு குரல் கொடுத்திருக்கிறார் ஸ்ருதி. மாணவர்களும், சமூக இயக்கங்களும் நிவாரண நிதி திரட்டுவதில் தங்களை ஈடுபடுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார். அத்துடன் பெரிய தொகை ஒன்றும் நிவாரண நிதியாக அளித்துள்ளார்.