1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Geetha Priya
Last Modified: வியாழன், 24 ஜூலை 2014 (11:18 IST)

கத்துக்குட்டியில் குத்தாட்டம் போட்ட சந்தியா

காதல் சந்தியா இவ்வளவு சீக்கிரம் மார்க்கெட் இழப்பார் என்று யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். திறமையைவிட அழகுக்கும், கவர்ச்சிக்கும் மரியாதை தரும் உலகில் சந்தியாக்களால் காலம் தள்ள முடியாது என்பது நிதர்சனம்.
என்ன நடந்தது?
 
தமிழில் வாய்ப்புகள் வறண்டு போன சந்தியா தாய்மொழியான மலையாளத்தில் நடிக்கச் சென்றார். சில படங்களில் முக்கியமான வேடத்தில் நடித்தார். அங்கும் அவருக்கு வாய்ப்புகள் குறைந்தன. தெலுங்கு, கன்னடத்திலும் அவரால் நிலைக்க முடியவில்லை.
 
இந்த வருடம் ஒரேயொரு மலையாளப் படத்தில் மட்டுமே கமிட்டாகியுள்ளார். சூதாட்டம் என்கிற தமிழ்ப் படமும் இருக்கிறது. இவை தவிர சந்தியாவின் கால்ஷீட் பேலன்ஸ், நில். 
 
இதன் காரணமாக கத்துக்குட்டி படத்தில் ஒரு குத்தாட்டம் ஆடுகிற அளவுக்கு நிலைமை கீழிறங்கியுள்ளது. சமீபத்தில்தான் சந்தானத்தின் ஜோ‌டியாக ஒரு படத்தில் நடித்தார். இப்போது ஒரு பாடலுக்கு குத்தாட்டம்.
 
ம்... எல்லாம் காலம் செய்யும் மாயங்கள்.