வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Geetha priya
Last Modified: திங்கள், 21 ஜூலை 2014 (11:06 IST)

எந்திரன் 2 படத்தில் வில்லன்? அமீர்கான் தரப்பு கண்டனம்

எந்திரன் இரண்டாம் பாகத்தை ஷங்கர் அடுத்து எடுக்க இருக்கிறார். அதற்காக கடந்த ஒரு வருடமாக அவர் முயற்சிகள் எடுத்து வந்தார். இரண்டாம் பாகத்தில் ரஜினிக்குப் பதில் வேறு நடிகரை அவர் வில்லனாக்க விரும்பினார். கடைசியில் அமீர்கானை வில்லனாக்குவது என்று முடிவு செய்துள்ளார் என பிரபல வாரப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டது. ஆனால் இந்த செய்தியை இரு தரப்பும் உறுதி செய்யவில்லை.
இந்நிலையில் மும்பையில் பேட்டிளித்த அமீர்கானின் மேனேஜர், அமீர்கான் தற்போது பி.கே. படத்தில் பிஸியாக இருக்கிறார். அதையடுத்து சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சியில் கவனம் செலுத்த உள்ளார். இவை தவிர வேறு எந்த திட்டமும் இல்லை. எந்திரன் 2 -ல் அவர் நடிப்பதாக வந்த செய்தி உண்மையில்லை. குறிப்பிட்ட பத்திரிகையிடம் அந்த செய்திக்காக விளக்கம் கேட்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
 
எந்திரன் 2 படத்தை ரிலையன்ஸ் நிறுவனம் தயாரிப்பதாகவும், ரஜினி நடிக்க இருப்பதாகவும் கொஞ்சநாள் முன்பு கூறினர். ரஜினியின் உடல்நிலை சண்டைக் காட்சிகளில் ரிஸ்க் எடுக்கிற நிலையில் இல்லை, அதனால் அவர் நடிக்கவில்லை என்றனர். பிறகு ரஜினிக்குப் பதில் அஜீத் நடித்தால் நன்றாக இருக்குமா இல்லை விஜய்யா என்று அவர்களாகவே ஒரு பட்டிமன்றம் நடத்தினர். இதில் எதுவும் உண்மையில்லை, அவரவர் கற்பனை.
 
உண்மை இதற்கு நடுவில் எங்கோ ஒளிந்துள்ளது.