1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Geetha Priya
Last Updated : திங்கள், 22 செப்டம்பர் 2014 (12:10 IST)

எந்திரனை முந்தணும் - கத்தி விநியோகிஸ்தரின் விருப்பம்

என்னதான் விஜய்யை விமர்சித்தாலும் ரஜினிக்கு அடுத்தபடி விநியோகஸ்தர்களும், திரையரங்கு உரிமையாளர்களும் விரும்பும் நடிகர் விஜய்தான். கத்தி படத்தின் வியாபாரம் கன ஜோ‌ராக நடந்து வரும் நிலையில், ஏரியாக்களை வாங்க விநியோகஸ்தர்களிடையே கடும் போட்டி.
திருச்சி, தஞ்சாவூர் பகுதிகளின் விநியோக உரிமையை பாஸ் ஃபிலிம்ஸ் சிவா வாங்கியுள்ளார். பெரிய படங்களின் திருச்சி, தஞ்சாவூர் பகுதி விநியோக உரிமை சிவாவின் கைகளைத் தாண்டி போவதில்லை. தமிழ் சினிமா வியாபாரத்தின் மைல் கல்லான எந்திரன் படத்தையும் இவர்தான் இந்தப் பகுதிகளில் வெளியிட்டார். மொத்தம் 35 திரையரங்குகள்.
 
கத்தி படத்தை அதைவிட அதிக திரையரங்குகளில் - சிவாவின் டார்கெட் 45 திரையரங்குகள் - வெளியிட வேண்டும் என்பது இவரது விருப்பம். முருகதாஸ், விஜய் கூட்டணியின் கத்திக்கு 45 திரையரங்குகளில் வெளியாகும் தகுதி மட்டுமின்றி, அதிகபட்ச வசூலை பெறும் தரமும் இருக்கும் என்று சிவா நம்புகிறார்.
 
சிவா போன்றவர்களின் வேகத்தைப் பார்த்தால் தீபாவளிக்கு வெளியாகவிருக்கும் மற்ற படங்களின் நிலைமை கவலையாகதான் உள்ளது.
 
ஐ படத்தின் விஎஃப்எக்ஸ் வேலைகள் இன்னும் முடிவடையாததால் ஐ தீபாவளிக்கு வெளியாகப் போவதில்லை என்பது கத்திக்கு கூடுதல் பலம்.