1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Abi)
Last Modified: செவ்வாய், 15 ஆகஸ்ட் 2017 (20:53 IST)

நாளை மறுநாள் ரிலீஸாகிறதா ‘விவேகம்’ டிரெய்லர்?

படம் ரிலீஸாக இன்னும் 9 நாட்களே இருக்கும் நிலையில், ‘விவேகம்’ டீஸர் எப்போது ரிலீஸாகும் என ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள் அஜித் ரசிகர்கள்.


 

 
அஜித் நடிப்பில் சிவா இயக்கியுள்ள ‘விவேகம்’ படம், வருகிற 24ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது. காஜல் அகர்வால் ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில், அக்‌ஷரா ஹாசன் மற்றும் விவேக் ஓபராய் இருவரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.
 
இந்தப் படத்தின் டீஸர் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ள நிலையில், டிரெய்லர் எப்போது ரிலீஸாகும் என ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர் ரசிகர்கள். டீஸரைப் போலவே டிரெய்லரையும் ஹிட்டாக்கும் ஆர்வத்துடன் அவர்கள் உள்ளனர். நமக்கு கிடைத்த தகவல்படி, நாளை மறுநாள் டிரெய்லர் ரிலீஸாகும் எனத் தெரிகிறது.