Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

இமான் இசையில் பாடும் யுவன்ஷங்கர் ராஜா

Last Updated: செவ்வாய், 28 நவம்பர் 2017 (17:32 IST)
கோலிவுட் திரையுலகில் ஒரு இசையமைப்பாளர் இசையில் இன்னொரு இசையமைப்பாளர் பாடல் பாடுவது அடிக்கடி நிகழ்ந்து வரும் நிகழ்வாக இருந்து வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் அனிருத், யுவன் இசையில் அனிருத், சிம்பு இசையில் யுவன் என இந்த டிரெண்ட் தொடர்ந்து கொண்டே
வருகிறது.

இந்த நிலையில் டிக் டிக் டிக்' படத்திற்காக டி.இமான் இசையில் யுவன்ஷங்கர் ராஜா ஒரு பாடலை பாடவுள்ளார். இந்த தகவலை டி,இமான் தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார். இந்த படத்தின் தீம் பாடலை யுவன்ஷங்கர் ராஜா, யோகி பி, சுனிதா சாரதி ஆகியோர் இணைந்து பாடுவதாகவும், இந்த பாடலை மதன் கார்க்கி எழுதியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த பாடலை வரும் டிசம்பர் 11ஆம் தேதி சிங்கிள் பாடலாக வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜெயம் ரவி, ஆரோன் அஜிஸ், நிவேதா, ஜெயப்பிரகாஷ், ரமேஷ் திலக், வின்செண்ட் அசோகன் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை சக்தி செளந்திரராஜன் இயக்கி வருகிறார்.


இதில் மேலும் படிக்கவும் :