திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By SINOJ
Last Modified: வியாழன், 14 மே 2020 (20:36 IST)

சல்மான் கான் தொடங்கிய யூடியுப் சேனல்…. குறைந்த நாளில் 10 லட்சம் பாலோயர்கள்

கொரோனா ஊரடங்கால் மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர், அதனால் பிரபல நடிகர், நடிகைகள் தங்கள் ரசிகர்களைக் மகிழ்விக்க பல்வேறு வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பிரபல ஹிந்தி நடிகர் சல்மான் கான், ஏப்ரல் 18 ஆம் தேதி முதல் தனது பெயரிலேயே ஒரு யூடியுப் சேனல் ஆரம்பித்துள்ளார்.

அதில், அவரே பாடி ஆடுவதுபோன்ற வீடியோக்களை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ இதுவரை 90 லட்சம் பார்வையாளர்களை பெற்றுள்ளது. மேலும்,  25 நாட்களுக்கு முன் தொடங்கப்பட்ட இந்த சேனல் குறைந்த நாட்களில் 1- லட்சம் பாலோயர்களைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.