Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பிக்பாஸ் வீட்டிக்கு வரவங்க உண்மையிலேயே சோறுதான் சாப்பிடறாங்களா தெரியல: வையாபுரி பேச்சு!

Sasikala| Last Updated: திங்கள், 31 ஜூலை 2017 (11:32 IST)
பிக்பாஸ் நிகழ்ச்சியின் புது போட்டியாளராக நடிகை பிந்து மாதவி அறிமுகப்படுத்தப்பட்டார். கடந்த ஒரு வார காலமாகவே ஓவியாவின் நடவடிக்கையில் மாற்றங்கள் உள்ள நிலையில், பிக்பாஸ் ஓவியாவின் புகழை குறைக்க திட்டமிட்டுவிட்டதாக சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது.

 
பிக்பாஸ் வீட்டுக்கு புதியதாக ஒரு விருந்தினர் இன்று வந்திறங்குவார் என்று வீட்டில் இருப்பவர்களுக்கு தகவல்  தெரிவிக்கப்பட்டது. அது தொடர்பாக நடிகர் வையாபுரி வீட்டில் உள்ளவர்களிடம் பேசுகையில், பிக்பாஸ் வீட்டில் என்ன கொடுமை எல்லாம் நடந்து கொண்டிருக்கிறது என்று தெரிந்துமா வருகிறார்கள். இது எல்லாம் தெரிஞ்சுமா வீட்டுக்குள் வரவங்க  உண்மையிலேயே சோறுதான் சாப்பிடறாங்களா தெரியல என்று பேசினார். என்னதான் இருந்தாலும் வையாபுரி சொன்னது  கொஞ்சம் ஓவர்தான்.

 
இதனை தொடர்ந்து நடிகை பிந்து மாதவி வருகை, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த ஒரு வாரமாக டல் அடித்த நிலையில் வரும்  வாரங்களில் மீண்டும் சூடு பிடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :