செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 30 ஜூலை 2024 (07:55 IST)

சூரிக்கும் எனக்கும் போட்டியா? -நடிகர் யோகி பாபு அளித்த பதில்!

அண்மை காலமாக தமிழில் யோகி பாபு இல்லாத படங்களே இல்லை என்கிற அளவிற்கு தன் இடத்தை யாரும் தட்டி பறிக்காத வகையில் தன் நடிப்பு திறமையை ஒவ்வொரு படத்திலும் அதிகரித்து காட்டுகிறார்.  அந்த வகையில் அவர் நடித்த தர்மபிரபு மற்றும் மண்டேலா ஆகிய படங்கள் வெற்றியடைந்ததை இப்போது போட் மற்றும் சட்னி சாம்பார் ஆகியவற்றில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதாநாயகனாக ஆனாலும் தொடர்ந்து காமெடி வேடங்களிலும் அவர் நடித்து வருகிறார்.

இதே போல காமெடியனாக இருந்து தற்போது கதாநாயகன் ஆகியுள்ள சூரி அசுர வளர்ச்சிக் கண்டு தொடர்ந்து கதாநாயகனாக நடித்து வருகிறார். அதனால் சூரிக்கும் யோகி பாபுவுக்கும் இடையில் போட்டியா என்ற கேள்வியை எதிர்கொண்டுள்ளார் யோகி பாபு.

அதற்கு அவர் “நாங்கள் இருவரும் ஆரம்பத்தில் இருந்தே சேர்ந்து நடித்து வளர்ந்தவர்கள். அதனால் ஒருவரின் வளர்ச்சியை மற்றொருவர் மகிழ்ச்சியோடுதான் பார்க்கிறோம். என்னுடைய மண்டேலா பார்த்து அவர் பாராட்டினார். அதே போல அவரின் விடுதலை மற்றும் கருடன் ஆகிய திரைப்படங்களைப் பார்த்து நான் வியந்து அவரைப் பாராட்டியுள்ளேன். நாங்கள் இருவரும் அடுத்த வேலை சோற்றுக்கு வழியில்லாமல் இருந்து வந்தவர்கள். அதனால் மற்றவரின் வளர்ச்சியை ஆரோக்யமாகதான் பார்ப்போம். எனக்கும் சூரிக்கும் இடையிலான போட்டி என்பது டீக்கடையில் நேரத்தை வீணாக்குவதற்காக பேசும் பேச்சு” எனத் தெரிவித்துள்ளார்.