செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 12 செப்டம்பர் 2021 (16:52 IST)

ஐன்ஸ்டீன் உயிரோடு இருந்தால் என்னை செருப்பால் அடித்திருப்பார்… யோகி பாபு!

சமீபத்தில் வெளியான டிக்கிலோனா படத்தில் யோகி பாபு விஞ்ஞானி ஐன்ஸ்டீன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சந்தானம் நடித்து வந்த ’டிக்கிலோனா’ என்ற படத்தின் படப்பிடிப்பு எல்லாம் முடிந்து ரிலீஸுக்கு தயாராகக் காத்திருந்தது. இந்த படத்தின் டிரைலர் ரசிகர்கள் இடையே வரவேற்பைப் பெற்றிருந்ததால் ஓடிடி நிறுவனங்கள் வாங்க முன்வந்தன. அதற்காக ஒரு பெரும் தொகையைக் கொடுக்கவும் தயாராக இருந்தனர். ஆனால்  தயாரிப்பாளர் கே ஜே ஆர் ராஜேஷ் இந்த படத்தை திரையரங்கில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்று உறுதியாக இருந்தார். ஆனால் அதற்கு கொரோனா வழிவிடவில்லை, இந்நிலையில் இப்போது இந்த படத்தை ஜி 5 ஓடிடி தளத்தில் செப்டம்பர் 10 ஆம் தேதி வெளியானது.

இந்நிலையில் இந்த படத்தில் நகைச்சுவை நடிகர் யோகி பாபு விஞ்ஞானி ஐன்ஸ்டீன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இது சம்மந்தமாக நடந்த ஒரு உரையாடலில் யோகி பாபு ‘இப்போது ஐன்ஸ்டீன் மட்டும் இருந்திருந்தால் என்னை செருப்பாலேயே அடித்திருப்பார்’ எனக் கூறியுள்ளார்.