1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Modified: செவ்வாய், 21 செப்டம்பர் 2021 (11:50 IST)

யோகி பாபுவின் பேய் மாமா ரிலீஸ் தேதி அறிவிப்பு!

யோகி பாபு நடிப்பில் ஷக்தி சிதம்பரம் இயக்கியுள்ள பேய் மாமா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் நகைச்சுவை நடிகர் யோகி பாபு முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் பேய்மாமா. முன்னதாக இந்த கதையை வடிவேலுவை வைத்து இயக்க ஷக்தி சிதம்பரம் முடிவு செய்திருந்தார். இந்த படத்தில் யோகி பாபுவுக்கு ஜோடியாக மாளவிகா மேனனும் மற்ற கதாபாத்திரங்களில் எம்.எஸ்.பாஸ்கர், லிவிங்ஸ்டன், மொட்டை ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி, மனோபாலா, ரேகா, கோவை சரளா, ரமேஷ் கண்ணா, வையாபுரி, சிங்கம்புலி, பவர்ஸ்டார், அனுமோகன், பாஸ்கி, சாம்ஸ், லொள்ளுசபா மனோகர், அபிஷேக், பேபி சவி என ஏராளமான நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.

கொரோனா இரண்டாம் அலையால் தள்ளிப்போன இந்த படத்தின் ரிலீஸ் தேதி இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் வரும் செப்டம்பர் 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.