திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 21 செப்டம்பர் 2021 (16:00 IST)

ஆர் ஜே பாலாஜி படத்தில் இணைந்த யோகி பாபு… இணையத்தில் வெளியான புகைப்படம்!

பதாய் ஹோ படத்தின் ரீமேக்கில் ஆர் ஜே பாலாஜி மற்றும் சத்யராஜ் உள்ளிட்டவர்கள் நடிக்க உள்ளனர்.

கடந்த ஆண்டு இந்தியில் வெளியாகி மிகப்பெரிய கவனத்தைப் பெற்ற திரைப்படம் பதாய் ஹோ. வீட்டில் கல்யாண வயதில் மகளும் மகனும் இருக்கும்போது அவர்களின் அம்மா கர்ப்பமாவதால் ஏற்படும் பிரச்சனைகளே இந்த படத்தின் கதை. மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த படத்தில் ஆயுஷ்மான் குர்ரானா நடித்திருந்தார். இந்நிலையில் இப்போது இந்த படம் தமிழில் ரீமேக் ஆக உள்ளது. முக்கியக் கதாபாத்திரங்களில் ஆர் ஜே பாலாஜி மற்றும் சத்யராஜ் ஆகியோர் நடிக்க உள்ளனர். போனி கபூர் தயாரிக்க உள்ளார்.இந்த படத்துக்கு பாக்யராஜ் படத்தின் தலைப்பான வீட்ல விஷேசங்க என்ற தலைப்பை வைக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடிகை ஊர்வசி நடிக்க உள்ளாராம். இதில் திருமண வயதில் மகனும் மகளும் இருக்கும் நிலையில் கர்ப்பமாகும் முதிய பெண்ணாக நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஒரே வீட்டில் நடப்பதால் அந்த வீட்டின் செட் பணிகள் இப்போது கோயம்புத்தூரில் நடந்து வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் தமிழ் சினிமாவில் இப்போது அதிக படங்களில் நடித்து வரும் முன்னணி நகைச்சுவை நடிகரான யோகி பாபுவும் இணைந்துள்ளார். இப்போது படப்பிடிப்பு தளத்தில அர் ஜே பாலாஜியோடு இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.