லாக்டவுனில் யோகி பாபு எடுத்த அதிர்ச்சி முடிவு –தயாரிப்பாளர்கள் அதிருப்தி!
லாக்டவுன் காலத்தில் சினிமா நடிகர், நடிகைகள் தங்கள் சம்பளத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில் யோகி பாபுவோ சம்பளத்தை ஏற்றியுள்ளாராம்.
தமிழ் சினிமாவில் இப்போதைய நிலவரப்படி நம்பர் ஒன் காமெடி நடிகர் யோகி பாபுதான். ஒரு நாளைக்கு அவர் லாக்டவுனுக்கு முன்பாக 8 லட்ச ரூபாய் சம்பளமாக வாங்கியதாக சொல்லப்படுகிறது. ஆனால் லாக்டவுனுக்கு மீண்டும் திரையுலகம் இயங்க ஆரம்பிக்கும் போது அனைத்து கலைஞர்களின் சம்பளமும் குறைய வேண்டும். அப்போதுதான் சினிமா ஆரோக்யமாக இருக்கும் என பேசப்பட்டு வருகிறது.
ஆனால் யோகி பாபுவோ தனது சம்பளத்தை 10 லட்சம் என உயர்த்தி உள்ளாராம். இதனால் அவரை ஒப்பந்தம் செய்த தயாரிப்பாளர்கள் அதிருப்தியில் உள்ளனராம்.