திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 21 டிசம்பர் 2023 (08:31 IST)

மூன்று மடங்கு சமபளம்… நேரடி தெலுங்கு படத்தில் நடிக்க ஒப்பந்தமான யோகி பாபு!

பேன் இந்தியா ஸ்டார் பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள இதிகாச படம் ஆதிபுருஷ் ஜூலை மாதத்தில் ரிலீஸாகி தோல்விப் படமாக அமைந்தது. இதையடுத்து அவர் நடிக்கும் சலார் படம் இந்த வாரம் ரிலீஸாக உள்ளது.

இதையடுத்து அவர் நாக் அஸ்வின் இயக்கும் கல்கி ஏடி 2898 என்ற படத்திலும் நடித்து வருகிறார்.  இந்த படத்துக்குப் பிறகு  தெலுங்கு சினிமாவின் முன்னணி இயக்குனரான மாருதியுடன் புதுப் படத்துக்காக இணைந்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் நடந்து முடிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாருதி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான “பக்கா கமர்ஷியல்” படம் கவனிக்கப்பட்ட ஒன்றாக அமைந்தது.

இந்நிலையில் இந்த படத்தில் மூன்று கதாநாயகிகள் நடிக்க உள்ளனர். நிதி அகர்வால், மாளவிகா மோகனன் மற்றும் ரித்தி குமார் ஆகிய மூவரும் கதாநாயகிகளாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் நடிகர் யோகி பாபுவும் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதன் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகிறார் யோகி பாபு. இந்த படத்துக்காக அவர் தமிழில் வாங்கும் சம்பளத்தை விட மூன்று மடங்கு அதிக சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.