வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 15 டிசம்பர் 2019 (08:37 IST)

பெண்கள் சபரிமலைக்கு செல்வதைத் தவிர்க்க வேண்டும் – யேசுதாஸ் சர்ச்சைக் கருத்து !

பெண்கள் சபரிமலைக்கு செல்வதால் ஆண்களின் மனதில் தவறான எண்ணத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளதாக பாடகர் ஜேசுதாஸ் தெரிவித்துள்ளார்.

சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பு வழங்கியது. ஆனால் அதன் பிறகு பல முறை பெண்கள் அங்கு செல்ல முயன்றபோது இந்து மற்றும் பாஜக அமைப்புகளால் அவர்கள் தடுக்கப்பட்டார்கள். இந்நிலையில் இப்போது ஐய்யப்பனுக்கு மாலை போட்டுள்ள பெண்கள் அங்கு செல்ல இருக்கையில் பாதுகாப்பு வழங்க கோரி பெண்கள் சார்பில் தொடரப்பட்ட வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இது பற்றி நேற்று சென்னையில் பேசிய பாடகர் ஜேசுதாஸ் ‘சபரிமலைக்கு ஐயப்பனைக் காண அனைவரும் செல்லலாம். ஆனால் அவர்கள் மனதில் கெட்ட எண்ணங்கள் இருக்கக் கூடாது, முன்னர் ஐய்யப்பனுக்கு மாலை போட்டவர்களை அவர்கள் குடும்பத்தில் உள்ளவர்கள் கூட பார்க்க மாட்டார்கள். தற்போது காலம் மாறிவிட்டது. பெண்கள் அணியும் உடை ஐயப்ப பக்தர்களின் மனதில் தவறான எண்ணத்தை ஏற்படுத்திவிடக் கூடாது. எனவே சபரிமலைக்குப் பெண்கள் செல்ல வேண்டாம். சபரிமலையைத் தவிர வேறு கோயில்களுக்கு அவர்கள் செல்லலாம்’ எனத் தெரிவித்துள்ளார்.