யசோதா யாருன்னு தெரியும்ல.. டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
நடிகை சமந்தா நடித்த யசோதா படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இந்த படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டது
இந்த நவம்பர் 11ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில் இந்தப் படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது
இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் செய்து குறித்த வீடியோ வெளியாகி உள்ளது. இந்த வீடியோவில் அக்டோபர் 27ஆம் தேதி மாலை 5 மணிக்கு ட்ரைலர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது
அந்த வீடியோவில் யாருன்னு தெரியும் இல்ல என்ற சமந்தாவின் வசனம் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், முரளி சர்மா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் இந்தப் படம் வெளியாக உள்ளது.
Edited by Siva