யாஷிகா தலைவர்! மீண்டும் முருங்கை மரம் ஏறிய பிக்பாஸ்:
பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்களில் சீனியரும் பொறுமையாக இருப்பவருமான மும்தாஜ் இதுவரை ஒருமுறை கூட வீட்டின் தலைவியாக இல்லாத நிலையில் யாஷிகா இன்று மூன்றாவது முறையாக தலைவியாகி உள்ளார். இப்போது உள்ள போட்டியாளர்களில் அதிக வெறுப்பை பார்வையாளர்களுக்கு தந்து கொண்டிருப்பவர் யாஷிகாதான். எனவே அவர் எவிக்சனில் சிக்கினால் அவரை வெளியேற்ற அனைவரும் காத்திருக்கின்றனர்.
எனவே யாஷிகாவை எவிக்சனில் இருந்து காப்பாற்ற யாஷிகாவை பல திட்டங்கள் போட்டு காப்பாற்றி வரும் பிக்பாஸ், இந்த முறை அதிக பந்துகளை பொறுக்கினார் என்ற காரணத்தால் மீண்டும் அவரை பிக்பாஸ் வீட்டின் தலைவியாக்கியுள்ளார்.
தலைவியாக்கியதோடு விடாமல் யாஷிகாவுக்கு ஏதாவது சலுகை கொடுத்து ஐஸ்வர்யாவையும் அவர் காப்பாற்றுவது உறுதிதான். இதற்கு பதிலாக பிக்பாஸ் நிகழ்ச்சியை இத்துடன் முடித்துவிட்டு ஐஸ்வர்யா-யாஷிகா இருவரும் வின்னர் என்று அறிவித்துவிட்டார் பார்வையாளர்களுக்கு டென்ஷனாவது குறையும்