வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 4 ஜூன் 2021 (22:11 IST)

யாமி கவுதம்- ஆதித்யா திருமணம்…

கடந்த 2019 ஆம் ஆண்டு ஆதித்யா தர் இயக்கத்தில் உருவான படம் யூரி – தி சர்ஜிக்கல் ஸ்டைரைக். இப்படத்தில் கவுசல், பரேஷ் ராவல்,யாமி உள்ளிட்ட பலர் நடித்தனர்.

இப்படத்தின் படப்பிடிப்பின் போது, ஆதித்யா தர் – யாமி கவுதம் ஆகிய இருவருக்கும் காதல் உருவானது.

இவர்களின் காதலுக்கு இருவரின் வீட்டாரும் பச்சைக் கொடி காட்டவே இன்று ஜூன் 4 ஆம் தேதி இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.

கொரோனா இரண்டாம் அலைப் பரவல் காரணமாக இக்கல்யாணத்தில் ஆதித்யா தர் – யாமி கவுதம் இருவரின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். இதுகுறித்து இருவரும் தங்கள் டுவிட்டர் பக்கத்தில், ''அன்பும் நட்பும் இணைந்து நாங்கள் தொடங்கும் இந்தப் பயணத்தில் உங்களின் ஆசீர்வாதமும், பாராட்டும், வாழ்த்துகளும் இருக்கவேண்டும்'' எனக் கேட்டுக்கொண்டுள்ளனர்.