1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 2 ஆகஸ்ட் 2021 (15:12 IST)

விபத்தால் வாய்ப்புகளை இழக்கிறாரா யாஷிகா ஆனந்த்!

நடிகை யாஷிகா நடிக்க ஒப்பந்தமான படங்களில் இருந்து அவர் கழட்டி விடப்படலாம் என சொல்லப்படுகிறது.

நடிகை யாஷிகா ஓட்டிச் சென்ற கார் விபத்துக்குள்ளானதை அடுத்து இந்த விபத்தில் அவரது தோழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்நிலையில் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வரும் நிலையில் யாஷிகாவின் ஓட்டுனர் உரிமம் பறிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.  மேலும் யாஷிகா சுய நினைவுக்கு வந்த பின்னர் விபத்து குறித்து விசாரணை நடத்தப்படும் என போலிஸ் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில் அப்போல்லோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த யாஷிகா ஆனந்த் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அங்கிருந்தே அவர் சிகிச்சையை தொடரப்போவதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் இன்னும் சில மாதங்கள் அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என்பதால் அவர் ஒத்துக்கொண்டு நடித்து வரும் படங்களின் வாய்ப்புகள் பறிபோக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.